Saturday , August 18 2018
Breaking News
Home / Health / கண்களைப் பாதுகாக்க முக்கிய டிப்ஸ் : அவசியம் படியுங்கள்.!!

கண்களைப் பாதுகாக்க முக்கிய டிப்ஸ் : அவசியம் படியுங்கள்.!!

உலகின் அதிசயங்களையும் விந்தைகளையும் கண்ணால் காண விழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உதவுகிறது. அத்தகைய பெரும் வேலையை செய்யும் நம் கண்களை பராமரிப்பதற்கு நாம் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. ஒரு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். நம்முடைய கண்களை நாம் பாதுகாக்கலாம்.

✷கண்களைப் பாதுகாக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

✷உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கும் பயிற்சி தேவைப்படுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகார திசை மற்றும் எதிர் கடிகார திசையில் கண்களை மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். இதன்மூலம் பார்வைத் திறன் கூர்மையாகும்.

✷கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்த நிறைய பயிற்சிகள் உள்ளன. அருகில் இருக்கும் ஒரு பொருளைப் பார்த்துவிட்டு, உடனே தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

✷பெருவிரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடது மற்றும் வலது திசைகளில் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் கண்களை கொண்டு திருப்பிப் பார்க்க வேண்டும்.

✷கண்களின் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே கண்களின் ஆரோக்கியத்திற்கு முட்டை, மஞ்சள், ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..

✷நீண்ட நேரம் கணினி திரை அல்லது மொபைல் திரையை பார்த்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். இது தவிர, நீலம் மாதிரியான நிறங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

Check Also

தாங்க முடியாத மூட்டு வலியா?அப்போ இந்த 4 பொருட்களையும் இப்படி யூஸ் பண்ணுங்க

முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து …