Sunday , June 17 2018
Breaking News
Home / Health / கண் பார்வைக் கோளாறை நீக்கும் கருவேப்பிலை

கண் பார்வைக் கோளாறை நீக்கும் கருவேப்பிலை

சாப்பிட்டால் கண் பார்வைக் கோளாறு நீங்கும், எலும்புகள் வலுப் பெற்று இரத்த சோகை நோய் வராது.

நம் அன்றாட வாழ்வில் நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் பெரும்பாலானவற்றில் கருவேப்பிலை இடம் பெற்றிருக்கும். வெறும் சுவைக்காகவும், நறுமணத்துக்காக மட்டும் கருவேப்பிலையை சேர்ப்பது இல்லை என்பதுதான் உண்மை. மிகப் பழமையான காலந்தொட்டே நம்முடைய உணவு பொருட்களில் நம் முன்னோர்கள் கருவேப்பிலையை சேர்த்து வந்துள்ளனர். சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் இதில் அதிகம்.

வைட்டமின் ஏ,பி,பி2,சி போன்ற உயிர் சத்துக்கள் நிரம்பியுள்ளன .இது பேச்சு வழக்கில் கறுவேப்பிலை, கறுகப்பிலை, கருவேப்பிலை என்றும் அழைக்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள் :

* கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக் கோளாறு நீங்கும், எலும்புகள் வலுப் பெற்று இரத்த சோகை நோய் வராது.

* வெறும் வயிற்றில் தினமும் 10 கருவேப்பிலையை காலை மற்றும் மாலை வேளைகளில் மென்று சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உடல் பருமனாவது கட்டுப்பாட்டுக்குள் வரும்.

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவர்கள். மேலும் கை மற்றும் கால்வலி, கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அதிக அளவு கருவேப்பிலையை உணவில் சேர்த்து கொள்ளவும்.

* உணவிலும், தனியாகவும் கருவேப்பிலையை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரை முடி நீங்கும்.அல்லது தேங்காய் எண்ணையுடன் கருவேப்பிலையை சேர்த்து நன்றாக காய்ச்சி,ஆற வைத்து அதை தினமும் தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.

* கருவேப்பிலையை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு அதனுடன் சின்ன வெங்காயம்,இஞ்சி,சீரகம்,2 பூண்டு,புதினா அல்லது கொத்தமல்லியை கலந்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு உண்டு வந்தால் மன உளைச்சல்,மன இறுக்கம்,மன அழுத்தம் குறைந்து மன நிலை சீராகும்.உடல் புத்துணர்வு பெரும்.

* வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும். ஜீரண சக்தியை கூட்டும் ,பேதியைக் கட்டுப்படுத்தும்.

* வாய் புண்ணைக் குணப்படுத்தும். பல் ஈறுகளை வலுவாக்கும்

Check Also

முதலிரவு சார்ந்த கட்டுக்கதைகளும், ஐயங்களும்!!!

ஓர் தலைமுறைக்கான விதை தான் திருமணம். அதை, முறையே ஆரம்பிக்கவே முதலிரவை முதல் சடங்காக வைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். ஆனால், …