Monday , September 24 2018
Breaking News
Home / Health / பணத்திற்காக நஞ்சாக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம்! திடுக்கிடும் தகவல்.!!

பணத்திற்காக நஞ்சாக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம்! திடுக்கிடும் தகவல்.!!

தினம் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள் உடலுக்கு மிக நல்லது என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கும். அப்படிப்பட்ட வாழைப்பழ வகை ஒன்றில் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் தகவல்கள் மறைந்துள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம் அப்படிப்பட்ட மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழ வகைகளில் ஒன்று தான் மோரிஸ். வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், நார்சத்து உள்ளிட்ட உடலுக்கு வளம்சேர்க்கும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த சத்துக்கள் நிறைந்த நமது பாரம்பரிய வகைகளான பூவாழை, செவ்வாழை, மொந்தன் வாழை, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற அனைத்து நல்வகை பழங்களையும் மீறி அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது பச்சை கலந்த மஞ்சள் நிற மோரிஸ் வாழைப்பழம். வாழை மரத்தின் இலை, காய், பூ, மட்டை, நார் என அனைத்துமே வியாபாரப் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும், சந்தைப்படுத்துதலிலும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. எங்கும் எதிலும் கலப்படம் என்ற நிலையில் வாழைப்பழத்தையும் விட்டு வைக்கவில்லை இந்த கலப்படம்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மோரிஸ் எனும் வாழைப்பழ ரகத்தின் பெயர் கூட நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. பெங்களூர் வாழைப்பழம் என அழைக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம் ரயில்வே வாழைப்பழம் எனவும் கூறப்பட்டது. ஏனெனில் இவ்வகை பழங்கள் துவக்கத்தில் ரயில் நிலையங்களில் மட்டுமே அதிகமாக விற்கப்பட்டது.

ஆனால் இன்றோ பெட்டிக்கடைகளிலும் இந்த பழம் இடம்பிடித்துவிட்டது. இந்த மோரிஸ் வாழைகள் திசு வளர்ப்பு எனும் முறையில் நடவு செய்யப்பட்ட, மரபணு மாற்றப்பட்ட ஒரு வாழையாகும். வெளிநாட்டிலுள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தயாரிப்புதான் இந்த மோரிஸ்வாழை என கூறப்படுகிறது

திசுவளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் மோரிஸ் வியாபார நோக்கிற்காக மட்டுமே விளைவிக்கபட்ட வாழை வகை. இதன் உருவாக்கத்தில் கரப்பான் மற்றும் காட்டுப் பூச்சிகளின் ஜீன்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர வைககும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழையில் பூச்சிகளால் வரும் நோயை கட்டுப்படுத்தி விளைச்சலை துரிதப்படுத்தவும், பொருளாதார நோக்கத்திற்காகவும் மட்டுமே உருவான இந்த மோரிஸ் வாழை, ஒரு பழமே இல்லை, தாவரத்திற்கும் விலங்கிற்கும் இடைப்பட்ட ஒரு உயிரினம் என்று மருத்துவ உலகில் கூறப்படுவதாகவும் விவரம் தெரிந்த சிலர் கூறியுள்ளனர்.

இந்த பழத்தை தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிட்டு வந்தால் ஒவ்வாமை, தோல் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா, ஆண்மைக்குறைவு, தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன் உள்ளிட்ட பல உபாதைகள் உடலுக்கு வந்து சேருவது நிச்சயம் என எச்சரிக்கின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

Check Also

எந்த பாத்திரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்.?

மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. …