Monday , September 24 2018
Breaking News
Home / Beauty / முகப்பரு தழும்புகள் மற்றும் கரு‌ப்பு‌ள்‌ளிக‌ள் மறைய…

முகப்பரு தழும்புகள் மற்றும் கரு‌ப்பு‌ள்‌ளிக‌ள் மறைய…

அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல், உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்

முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்.

முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்.

முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின் மேல் போட்டு வரவும்.

பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.

ஆரோக்கியம்

நாட்டு மருந்து கடையில் புனுகு வாங்கி அதை முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.

பப்பாளி மரப் பாலை சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவ நல்ல பலன் கிடைக்கும்.

கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு, பாதாம் பருப்பு – மூன்று (நீரில் ஊற வைத்தது), தயிர் – 2 – டீ ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன் ஆகியவற்றை அரைத்து எடுத்து முகம், கழுத்து பகுதி களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவேண்டும். இவ்வாறு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப் பரு ,கரும்புள்ளி, தழும்புகள் நீங்கி முகம் அழகு பெரும்.

தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்.

தேனுடன் சிறிது கடுகு தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்.

தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்.

பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகபரு நீங்கும்.

சோற்று கற்றாழை-யில் உள்ள gel-ஐ முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்

முகத்தில் காயத்தழும்புகள், தீப்புண் தழும்புகள் இருந்தால்
அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்

Check Also

எந்த பாத்திரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்.?

மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. …