Saturday , January 19 2019
Breaking News
Home / Health / தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றத்தை அவதானிக்கலாம்

தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றத்தை அவதானிக்கலாம்

மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் உலர் திராட்சை பழம் நல்ல சிவப்பாக அல்லது கருஞ்சிவப்பாக இருக்கும் இந்த பழம் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும்.

நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ்,ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும். உலர் திராட்சை பழங்கள் குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் பழத்தில் 46 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

புத்துணர்ச்சி மிக்க உலர் திராட்சை பழத்தில் விட்டமின் சி, நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்பட வல்லது. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், விட்டமின் சி யின் பங்கு மகத்தானது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் தன்மையும் விட்டமின் சி-க்கு உண்டு.

விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் உலர் திராட்சை பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. விட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித் தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் விட்டமின் ஏ-விற்கு உள்ளது.

லுடின், கிரிப்டோசாந்தின், ஸி-சாந்தின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை நீக்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. ஸி-சாந்தின், கண்களின் ரெட்டினா பகுதியை புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புத்தாது மிக அவசியம். பொட்டாசியம் உடலை வளவளப்பு தன்மையுடன் வைப்பதிலும், இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது.

பி-காம்ப்ளக்ஸ் விட்டமின்களான நியாசின், விட்டமின் பி6, பான்டோ தெனிக் ஆசிட்போன்றவை உள்ளன. காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தில் இந்த விட்டமின்கள் துணைக் காரணியாக பங்காற்றுகிறது.

உலர் திராட்சை பழத்தில் சிறிதளவு விட்டமின் கே, உள்ளது. இது இரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது.

நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும். சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக

சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.

இரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவு நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தினமும் உணவு உட்கொண்ட பின்னர் உலர் திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச் சத்துக்கள் உள்ளன. பழத்தில் உள்ள சார்பிட்டல், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள் ஜீரண மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

உடலும் மனமும் சேர்வடையாமல் புத்துணர்சியுடன் இருக்க தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் அதிக சோர்வடைகிறது. இதனால் இளவயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக்கின்றனர். இந்த குறைகள் நீங்கி உடல் புத்துணர்வடைய பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம்.

சாப்பிடும் முறை

உலர் திராட்சை பழங்கள் தோலுடன் அப்படியே சுவைத்துச் சாப்பிட ஏற்றது. இனிப்பு சுவையுடன், சாறு நிறைந்த இதனை களிப்புடன் சாப்பிடலாம்.

சாலட்டுகளில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு.

உலர் திராட்சை பழத்தில் ஜாம், ஜெலி தயாரிக்கப்படுகிறது.

இறைச்சியுடன் பழ வகைகள் சேர்த்து செய்யப்படும் pieவகை உணவுகளிலும், வேறு பல உணவு வகைகளிலும் உலர் திராட்சை பழங்கள் சேர்க்கப்படுகிறது.

கேக், ஐஸ்கிரீம்களிலும் உலர் திராட்சை பழங்கள் சேர்க்கப்படுகிறது.

உலர் திராட்சை பழத்தை உலர்த்தி காய வைத்தும் சாப்பிடலாம் உலர்த்தப்பட்ட பழங்கள் பைகளில் அடைத்து விற்கப்படுகிறது.

Check Also

ஞாபக சக்தி

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? அவசியம் இதை படியுங்கள்.

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக …

Open