Monday , September 24 2018
Breaking News
Home / Health / பல் சொத்தை: இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

பல் சொத்தை: இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

பற்சொத்தை என்பது உங்கள் பற்களில் ஒரு குழி போன்ற அமைப்பில் கருப்பு, ப்ரவுன் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். பற்களில் உள்ள எனாமல் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளால் வெளியாகும் அமிலத் தன்மையால் அரித்து விடுகிறது.

உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் சென்று மாட்டிக் கொள்வதாலும் அந்த பகுதியில் பாக்டீரியாக்களின் காலனி பெருகி வெள்ளை நிற படலத்தை ஏற்படுத்தி பற் சொத்தையை ஏற்படுத்துகிறது.

உண்மையில் எதனால் பற்சொத்தை ஏற்படுகின்றது தெரியுமா? நாம் விரும்பி உண்ணும் அதிகப்படியான சக்கரை உணவுகளே தான் காரணமாகின்றது. பற்சொத்தையை ஏற்படுத்து உணவுகள் பற்றி பார்ப்போம்.

செயற்கை குளிர்பானங்கள்

குளிர்ந்த செயற்கை குளிர்பானங்கள், சோடா, மாக்டைல்ஸ் போன்ற பானங்களில் அதிகமான இனிப்பு சுவை, பாஸ்பரஸ், கார்பனேஷன் போன்றவைகள் உள்ளன.

இவைகள் நமது பல் எனாமலை எளிதாக அரித்து விடும்.

டேஃபிஸ், லாலி பாப்

டோஃபிஸ் போன்றவற்றில் நகட், கேரமல் போன்றவை சேர்க்கப்படுவதால் அவை பற்களில் ஒட்டிக் கொண்டு சீக்கிரம் பற்களை விட்டு போகாது.

ஏனென்றால் இதை மெதுவாக சப்பி சாப்பிடுவதால் பற்களில் பாதிப்பை ஏற்படுத்தி பற்சொத்தை ஏற்படுத்தி விடுகின்றது..

ஸ்டார்ச் உணவுகள்

பிரெஞ்ச் ப்ரை, ப்ரைடு ரைஸ், ப்ரட் ஜாம், ஆலு பூரி போன்ற உணவுகளை உட்கொள்ளுவதாலும் பற்களில் சொத்தையை ஏற்படுகின்றது. இதிலுள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையாக உடைவதே இதற்கு காரணம்.

வறுத்த பிரட் துண்டு

வறுத்த பிரட் துண்டுகளும் உங்கள் மேல் பற்களில் ஒட்டிக் கொண்டு பற்சொத்தையை ஏற்படுத்தும்.

பாட்டிலில் அடைக்கப்பட்ட பழ ஜூஸ்கள்

பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழ ஜூஸ்களில் கூட நிறைய இனிப்பு சுவைகள் சேர்க்கப்படுகிறது. இவைகளும் உங்களுக்கு பற்சொத்தையை உருவாக்கும்.

பர்கர் மற்றும் பீட்சா

பர்கர், பீட்சா, தக்காளி கெட்ச்அப், இதெல்லாம் சேர்த்து சாப்பிடும் போது இதிலும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான பிரட் துகள்கள் பற்களில் ஒட்டிக் கொண்டு எளிதாக பற்சொத்தையை ஏற்படுத்தி விடும்.

ஜெல்லி

இதில் அடர்ந்த பழச்சாறுகள் கலக்கப்படுவதோடு அதிக சர்க்கரை சத்தும் சேர்க்கப்படுகிறது. இதுவும் அடிக்கடி சாப்பிடுவதனால் பற்சொத்தை ஏற்படுகின்றது.

கேக் மற்றும் பேஸ்ட்ரீஸ்

கேக்குகளில் சுகர் சிரப்பை லேயர் லேயராக பயன்படுத்தி அலங்காரம் செய்து இருப்பார்கள். சாக்லேட் சிப்ஸ், பட்டர் ஸ்காட்ச், துருவிய சாக்லேட் துகள்கள், சில்வர் பால்ஸ் என்று அதிகப்படியான சர்க்கரை பொருளைக் கொண்டு செய்ப்படுவதனாலும் இதை விரும்பி சாப்பிடுவதனாலும் விரைவாக பற்களை சொத்தையாக்கி விடுகின்றது.

ப்ரைடு ஸ்வீட்ஸ்

குளோப் ஜாமூன், ரசகுல்லா, சாம்சாம்ஸ், டபுள் சாக்லெட் நட்ஸ் இதில் சேர்க்கப்படும் சர்க்கரை பாகு, அதிகமான சர்க்கரை பொருட்கள், அதன் மேல் ஊற்றப்படும் சர்க்கரை சிரப் போன்றவற்றாலும் பற்சொத்தை ஏற்படும்.

க்ரீம் பிஸ்கட்

க்ரீம் பிஸ்கட் சேர்க்கப்படும் க்ரீமில் நிறைய சர்க்கரை உள்ளன. இவைகளும் பற்சொத்தை ஏற்படக் காரணமாகவும் ஏனெனில் இதை மென்று சாப்பிடும் போது பற்களின் ஓரங்களில் ஒட்டிக் கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது.

Check Also

எந்த பாத்திரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்.?

மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. …