Wednesday , November 21 2018
Breaking News
Home / Health / தோள்பட்டை, கழுத்து வலிக்கு நிரந்த தீர்வு தரும் மத்யாசானம்

தோள்பட்டை, கழுத்து வலிக்கு நிரந்த தீர்வு தரும் மத்யாசானம்

கணிணி முன் நீண்ட அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு,உ ட்கார்ந்த படி அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு தோள்பட்டை, கழுத்தில் கடும் வலியை அவதிப்படுவார்கள்.

எந்த ஒரு காயமும் ஏற்படாமலே தோள்பட்டை வலுவிழந்தது போல் வலி ஏற்படும். இதனை எண்ணி வருத்தப்படுபவர்களுக்கு யோகாவில் நல்ல தீர்வு கிடைக்கும். தோள் பட்டை கழுத்தை வலியை மத்யாசனம் குறைக்கும்.

தோள்பட்டை கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு யோகாவில் நிரந்தர தீர்வு உள்ளது. இப்போது கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கான யோகாவை பார்க்கலாம்.
தோள்பட்டை கழுத்து வலியை குறைக்கும் மத்யாசனம்

இந்த யோகா செய்வதால், மன அழுத்தம், கழுத்துவலி, நரம்பு பிரச்சனை ஆகியவை தீரும். தோள்பட்டை வலியை குணப்படுத்தும். சுவாசத்தை சீர்படுத்தும். மார்புக் கூடு விரிவடையும். தைராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்

அதேபோல் வயிற்று பகுதியில் அழுத்தம் தரப்படுவதால் கொழுப்புகள் குறைந்து தொப்பை குறைய வழிவகுக்கும். நாள் தவறாமல் இந்த யோகாவை செய்து வந்தால், எளிதில் பலன் கிடைக்கும். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :

முதலில் தரையில் மல்லாக்க படுத்துக் கொள்ளுங்கள். கால் மற்றும் கைகளை நேராக வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாய் மூச்சு விடவும். இப்போது மெதுவாய் இரண்டு முழங்கைகளை ஊன்றி உடலை மட்டும் தூக்குங்கள்.

இடுப்புப் பகுதி தரையிலேயே இருக்க வேண்டும். பிறகு மார்பினை மேலே உயர்த்தி தலையை இப்போது தரையில் முட்டுங்கள். மெதுவாய் மூச்சை இழுத்து விடுங்கள்.

கழுத்திற்கு அதிகம் சிரமம் தராதவாறு பார்த்துக் கொள்ளவும். இப்போது மெதுவாய் மார்பை தரையில் பதித்து இயல்பு நிலையில் படுத்துக் கொள்ளுங்கள்.

அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மற்றும் குறைவான ரத்த அழுத்த, உள்ளவரகள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். முதுகு மற்றும் இடுப்பு அறுவை சிகிச்சை செய்தவர்கள், கீழ் முதுகு வலி உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

Check Also

எந்த பாத்திரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்.?

மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. …

Open