பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக வலி தரக் கூடியவை எது தெரியுமா..?

வலிகளையே அதிக வலி மிக்கது என்றால் குழந்தை பிறப்பின் போது ஏற்படும் வலி தான் என்று சொல்லப்படுவதுண்டு.

அந்த வலி எப்படிப்பட்டது என்பதை தனக்கு வராத வரை வலிகளை உணர முடியாது என்பதால், பிரசவ வலியை ஒத்த பிற வலிகள் எல்லாம் என்னென்ன என்று பார்க்கலாம்.

மைக்ரேன் தலைவலி :

லேசாக தலைவலி போல ஆரம்பித்து பின்னர் பயங்கரமானதாய் வலி பரவிடும். அதிக மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் மைக்ரேன் தலைவலி ஏற்படும். அதிக வெளிச்சம், அதிரும் சத்தங்கள், ஒவ்வாத வாடை போன்றவற்றாலும் மைக்ரேன் ஏற்படும்.

எலும்பு முறிவு :

பிரசவம் முடித்த வந்த பெண்களிடம் வலி எப்படியிருந்தது என்று கேட்டால் அவர்கள் இதைத்தான் சொல்வார்கள் குறிப்பாக கணுக்கால் முறிந்தால் எப்படிப்பட்ட வலி இருக்குமோ அதையொத்த வலி என்று. ஒவ்வொரு முறை மூச்சு வாங்கும் போதும் விடும் போதும் வலியை உணர்வீர்கள்.

கிட்னி கற்கள் :

கிட்னியில் உள்ள கற்களின் அளவைப் பொருத்து ஒரு வாரமோ அல்லது ஒரு மாதம் வரையிலோ இந்த வலியை அனுபவிப்பார்கள். அடிவயிற்றில் ஏற்படும் வலி எந்த வேலையையும் செய்ய விடாமல் பாடாய் படுத்திடும்.

பல் வலி :

ஈறுகளில் உள்ள திசுக்கள் பாதிப்படைவதால் பல் வலி ஏற்படுகிறது. ரூட் கேனால் சிகிச்சை மேற்கொண்டால் இந்த வலி குறைந்திடும். மயக்க மருந்து உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட திசு அகற்றப்படும். உணவை மென்று சாப்பிட முடியாது, தாடையிலிருந்து தலை வரை வலி பரவிடும்.

அறுவை சிகிச்சை :

நார்மல் டெலிவரியை விட சில அறுவை சிகிச்சைகள் வலி மிகுந்தது என்று சொல்லலாம். அவற்றில் ஒன்று தான் சிசேரியன். செய்யப்படுவது மேஜர் சர்ஜரியா அல்லது மைனர் சர்ஜரியா என்பதைப் பொறுத்து வலி வேறுபடும். அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது மயக்கமருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு பிறகான வலி வாட்டியெடுத்துவிடும். சில வேகமான அசைவுகளின் போது, தும்மும் போது எல்லாம் வலி அதிகரிக்கும்.

சிறுநீர்த்தொற்று :

சிறுநீர்ப்பையில் ஏற்படும் பாக்டீரியா தொற்று காரணமாக வலி ஏற்படுவது. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும். அத்துடன் சிறுநீர் கழிக்கும் போது அதிக வலி ஏற்படும். அடி வயிறு, பிறப்புறுப்பு போன்ற இடங்களில் வலியை உணர்வீர்கள்

Related posts:

புற்று நோயை ஒரு துளி ரத்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்
ஆண்களே! உங்க கனவுல பொண்ணுங்க இப்படியெல்லாம் வந்தா என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?
7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைப்பதற்கான இலகுவான வழிமுறை
குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் கொடுக்கக்கூடாது எப்போ தெரியுமா.?
ஒரு மணிநேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும் தெரியுமா?
இந்த பழக்கங்களை விட்டொழித்தால் மார்பக புற்று நோய் வராது!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...