காலையில் தினமும் தோசை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

நம்மில் பலருக்கும் காலை உணவாக தோசை சாப்பிட தான் பிடிக்கும். இட்லி அல்லது உப்புமா என்றால் முகம் கோணலாக மாறிவிடும். தோசையின் ஸ்பெஷல் என்னவெனில் இது வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவாக இருந்து வருகிறது.

அம்மாக்கள் சற்று திட்டத் தான் செய்வார்கள், “எப்போ பாத்தாலும் தோசையே தான் வேணுமா..” என. ஆனால், தோசை சாப்பிடுவதிலும் சில நன்மைகள் இருக்கின்றன. ஆனால், தினமும் வெறும் அரிசி மாவு தோசையாக மட்டுமின்றி கம்பு, ராகி என வகை வகையான தோசைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

இதில் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டியது எண்ணெய் விஷயத்தில் தான். சிலர் கரண்டி கணக்கில் எண்ணெய் பயன்படுத்துவார்கள். இதை மற்றும் தவிர்த்துவிட்டீர்கள் எனில் தோசையும் இட்லியை போல ஓர் சிறந்த காலை உணவு தான்….

கார்ப்ஸ் உடற்சக்திக்கு நமது உடலுக்கு கார்ப்ஸ் அவசியம் தேவைப்படுகிறது. தோசையில் இது கிடைக்கிறது. ஆனால், எண்ணெய் மிதக்க தோசை சாப்பிடுவதை மட்டும் தவிர்க்கவும்.

மினரல்ஸ் மற்றும் இரும்பு தோசையில் இருந்து நமக்கு மினரல்ஸ் மற்றும் வைட்டமின்களும் கூட சிறிதளவு கிடைக்கிறது. தோசைக்கு சாம்பார் பயன்படுத்துவதன் மூலம் புரதம், வைட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நிறையவேக் கிடைக்கின்றன.

இதயம் தோசையில் நிறைவுற்ற கொழுப்பு குறைவு. இதை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய நலனை பாதுகாக்கலாம். குறிப்பாக எண்ணெய்யை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

வகைகள் ராகி, கம்பு, சோளம், என எதை வேண்டுமானாலும் இதில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம். ராகி, கம்பி போன்றவற்றை வெறுமென சாப்பிட விரும்பாதவர்கள் கூட தோசையில் கலந்து சாப்பிட விரும்புவார்கள். இதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

முட்டை தோசை சிலருக்கு வேக வைத்த முட்டையை சாப்பிட விரும்பமாட்டார்கள். அதுவே முட்டை தோசையாக சாப்பிட பிடிக்கும். இதனால் உடலுக்கு தேவையான புரதமும் கிடைக்கிறது.

நீரிழிவு சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள், அரிசி மாவு தோசைக்கு பதிலாக ராகி, கம்பு போன்றவற்றை கலந்து தோசை சாப்பிடலாம், இது உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக தேங்காய் சட்னி பயன்படுத்த வேண்டாம்

Related posts:

வயாகரா பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய உண்மைகள்!
தினமும் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கம் உடையவரா? கட்டாயம் இத படிங்க!!
அதிகமாக கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வரும்
பல் சொத்தையா கவலைய விடுங்க! வீட்டிலேயே இருக்கு உடனடித் தீர்வு!
35 வயதிற்கு மேலானவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
அரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகளா? இனிமே கீழே ஊற்றாதீர்கள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...