சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி வெண்டைக்காய்

வெண்டைக்காய் பல நோய்களுக்கு அருமருந்தாகும், இது Abelmoschus Esculentus என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது.

சர்க்கரை நோயில் தொடங்கி அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வைக்குறைபாடு என பலவித நோய்களையும் தீர்க்கக்கூடியது சகல நோய்களையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி என்று வெண்டைக்காயை கூறுகின்றார்கள்.

மலச்சிக்கலைக் குறைப்பதற்கு வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காய்த் துண்டுகளைப் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை வடிகட்டி நீரை மட்டும் பருகி வந்தால் குடலியக்கம் சீராகி மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துகள், பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

இதேபோல் இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன.

வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவதால், அதிலுள்ள ஃபோலேட் எலும்புகளை வலுவாக்கி ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வராமல் தடுக்கிறது.

எலும்புகள் வலுப்பெறவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் தினமும் வெண்டைக்காய் நீரை குடித்து வரலாம்.

சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் வெண்டைக்காயை ஊறவைத்து இந்ந நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் குறைய வாய்ப்புண்டு.

வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள், விட்டமின் சி போன்றவை இருப்பதால், வெண்டைக்காயை நீரில் ஊறவைத்து அதனைப்பருகுவதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கம் குறையும்.

கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பக் காலத்தில் வெண்டைக்காயினை தினமும் உணவில் சேர்ப்பது அவசியமாகும்.

வெண்டைக்காயில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கேட்ராக்ட் மற்றும் குளூக்கோமா பிரச்னைகளைத் தவிர்ப்பதோடு பார்வைத் திறன் நன்கு மேம்பட உதவுகிறது.

வெண்டைக்காய் வேரைக் காய வைத்து எடுத்த பொடி ஐந்து முதல் பத்து கிராம், இரண்டு டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டை ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் பருகி வந்தால் தாம்பத்யம் சிறக்கும்.

உடம்பில் வாய்வு அதிகம் இருப்பவர்கள் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டக் கூடாது, ஏனெனில் இது வயிற்றுவலியை ஏற்படுத்திவிடும்.

Related posts:

குழந்தைகளுக்குப் பசியைத் தூண்டும் அத்திப்பழம்!
மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!
பெண்களுக்கு அதிகம் வரும் புற்றுநோய் பற்றியும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளும்.
இவங்கெல்லாம் இஞ்சியை சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து அது யாரு தெரியுமா..?
கெட்ட கொழுப்பை கரைக்கும் கொத்தமல்லி ஜூஸ்!
குழந்தை வரம் கொடுக்கும் அற்புத நாட்டு மருந்து இதுதான் தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...