மகாபாரதத்திற்கும் இஸ்லாத்துக்கும் உள்ள அதிரவைக்கும் தொடர்பு

பழமொழியும் அதன் விளக்கமும் – தெரிந்துகொள்வோம்

பழமொழி : “காத்து உள்ளபோதே தூத்திக்கொள்”

விளக்கம்: காத்து அடிக்கும்போது பதரோடுள்ள நெல்லை மேலிருந்து கழாக கொட்டினால் பதர் நெல்லை விட்டு பிரிந்து காத்திலே பறக்க நெல் மட்டும் தணியாக கிழே சேகரிக்கப்படும். காத்து அடிக்கும் பொழுது இதை செய்து கொள்ளச் சொல்லி அன்றைய விவசாயிகளுக்குச் சொன்னது. ( இப்போது நவீன நெல் ஆலைகளில் ராட்சத மிண்விசிறிகள் மூலம் இது நடக்கிறது)

பழமொழி : ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்

விளக்கம் : ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும்.. அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில் அவளை அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பான் எனில் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும்.

பழமொழி : “மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே” .

விளக்கம் : உண்மையிலே இது “மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே” என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள்.இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது.

பழமொழி : “ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம்”

விளக்கம் : முன் காலத் திருமணங்களின் போது, பெரிய பெரிய கிண்ணங்களில் (சந்தனப்பேலா என்று பெயர்) குழம்பு போன்று சந்தனம் தயாரித்து நிறைத்திருந்தார்கள். வருகிற முதியவர்களுள் பெரும்பாலோர் சட்டையணிந்திருப்பதில்லை. குளிர்ச்சி பெறவும், வியர்வை நாற்றம் போகவும் சந்தனக் குழம்பை அள்ளி மார்பு முழுவதும் அவர்கள் பூசிக்கொண்டார்கள். அந்த வழக்கம் நீங்கிவிட்டதால் பழமொழிக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.

Related posts:

பாலியல் தொழில் : 5 மணி நேரம் 5 ஆண்கள்.. கணவனே வற்புறுத்தும் அவலம்!
திருமண மோதிரத்தை ஆண்குறியில் மாட்டி, பரிதவித்த சீன மாப்பிள்ளை!
சுன்னத் செய்வதன் கட்டாயம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
ஒரே வாரத்தில் அழியப்போகும் உலகம்? சிந்திக்கவும் தீவீரமடையவும் வைக்கும் பிண்ணணி
விண்வெளியில் இறந்து போகும் வீரர்களை, நாசா என்ன செய்கிறது..??!
எச்சரிக்கை..!! உங்கள் மனைவி மற்றும் காதலியும் இப்படி ஏமாற்றலாம்..!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...