எந்த வயதினர் எவ்வளவு நேரம் வரை தூங்கலாம்? அவசியம் பகிருங்கள்

தூங்குவது என்பது அலாதியான சுகம் தான். ஆனால் சிலருக்கோ தூக்கம் என்றால் என்ன? என்று கேட்குமளவுக்கு சிலர் தூங்குவதே கிடையாது. ஆனால் உறக்கம் என்பது நம்முடைய உடல்வலிமையோடும் வயதோடும் கூட தொடர்புடையது.

ஒவ்வொரு வயதினரும் ஒரு நாளைக்கு கட்டாயமாபக இத்தனை மணிநேரம் தூங்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது சரி நீங்கள் எவ்வளவு நேரம் வரை தூங்கலாம்னு தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் உறக்கம் என்பது 8 மணி நேரம் அவசியம் என்று கூறுவார்கள். ஆனால் வயதுக்கேற்ற தூக்கம் மிக அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்தவர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம் தான் தூங்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அது என்னவென்று தெரியுமா?


இதுவரையிலும் தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இனியாவது தெரிந்துகொண்டு, அதன்படி தூங்குங்கள்.

வயது தூங்க வேண்டிய நேரம் (மணி)

பிறந்தது முதல் 3 மாதம் வரை – 14 முதல் 17 மணி நேரம்

4 மாதம் முதல் 11 மாதம் வரை – 12 மணி நேரம் முதல் 15 மணி நேரம்

1 வயது முதல் 5 வயது – 11 மணிநேரம் முதல் 14 மணி நேரம் வரை

6 வயது முதல் 13 வயது வரை – 13 மணிநேரம் முதல் 16 மணி நேரம்

14 வயது முதல் 17 வயது வரை – 13 மணி நேரம் முதல் 10 மணிநேரம்


18 வயது முதல் 64 வயது வரை – 7 மணிநேரம் முதல் 9 மணிநேரம் வரை

65 க்கு மேல் உள்ளவர்கள் – ஒரு நாளைக்கு கட்டாயம் 8 மணிநேரம் தூங்க வேண்டும்.

சிறு வயது முதலிருந்தே இந்த முறையைப் பின்பற்றினால் இன்னும் ஆரோக்கியமாகவும் அதிக உடல் வலிமையோடும் இருக்க முடியும்.

Related posts:

சுன்னத் செய்வதன் கட்டாயம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
அதிகமாக கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வரும்
உங்கள் பிறந்த எண்ணுக்கான அதிர்ஸ்டங்களும், துரதிர்ஸ்டங்களும்!
புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் தெரியுமா?
திருமணத்தில் தாலி நுழைந்த கதை தெரியுமா?.. ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது..!!
ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய பாம்பை விட கொடிய விஷங்கள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...