இளநரையால் அவதிப்படுபவர்கள் இந்த ஆயிலை கொஞ்சம் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க

முடி உதிர்வதற்கு முக்கியமான காரணம் போதிய ஊட்டச்சத்து இல்லாமையே. இன்றைய இளம் தலைமுறையினரை, முடி உதிர்தல் மட்டும் அல்லாமல் இளநரையும் பாடாய் படுத்துகிறது.

அதற்கு மிக எளிமையாக வீட்டிலேயே சில மூலப்பொருட்களைக் கொண்டு ஹேர்ஆயில் தயாரித்துக் கொள்ள முடியும்.


தேவையான பொருட்கள்:

500 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய்

15 நெல்லிக்காய்

1 கப் கரிசலாங்கண்ணி

1 கப் கறிவேப்பிலை

கடுகு எண்ணெய்

ஒரு கைப்பிடியளவு வெந்தயம்


செய்முறை

முதலில் தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்து நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, கரிசலாங்கண்ணி இலையை எண்ணெய்க்குள் போட்டு நன்கு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து குமிழ்கள் மேலே வரும்பொழுது, நெல்லிக்காய், வெந்தயம், கறிவேப்பிலை மூன்றையும் சேர்க்க வேண்டும்.

நன்கு கொதித்து வரும்போது, எண்ணெயின் நிறம் செிறிது சிறிதாக மாறிக்கொண்டே வரும். நன்கு கொதித்தவுடன் இறக்கி வைத்து, நன்னு ஆறியபின் வடிகட்டி சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும். அதன்பின் கஐகு எண்ணெயை 50 மில்லி அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த எண்ணெயைத் தடவி, தலைக்குக் குளித்து வந்தால், தலையில் ரத்த ஓட்டம் சீராவதோடு, இளநரை வராமல் தடுக்க முடியும்.

Related posts:

கடுக்காயின் மருத்துவ பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்...
தலையில் ஒரு சில இடங்களில் மட்டும் சொட்டையா? அதற்கான சிறப்பு தீர்வுகள்!
விஜய் டிவியின் டுபாக்கூர் பிக் பாஸ் - வச்சு செஞ்ச கலாய் (Video)
எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!
லிப்ஸ்டிக் போடும் போது கவனிக்க வேண்டியவை ..
புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு காணாமல் போய்விடும்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...