வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

உருளைக்கிழங்கால் ஆபத்துகளும் உள்ளது!

உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் வைத்திருப்பதால் அதில் முளைக்கட்டி விடுவதோடு பச்சை நிறத்தில் மாறுகிறது.

இத்தகைய முளைக்கட்டிய உருளைக்கிழங்குகளில் சாக்கோனைன் (aconChine) மற்றும் சாலனைன் (Solanine) போன்ற நச்சுப் பொருட்கள் உண்டாகிறது.

இவ்விரு நச்சுப் பொருட்களில் சாலனைன் தான் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது. இவ்வகை நச்சுக்கள் குடல் பாதையில் எரிச்சலை உண்டாக்கி, பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது.அதோடு, முளை விட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப் பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்காக மாறுகிறது. எனவே தோலில் பச்சை நிறத்திட்டுகள் மற்றும் மேல்தோல் சுருங்கிய, முளைக்கட்டிய உருளைக்கிழங்குகளை சாப்பிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது.

முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஏற்படுத்தும் ஆபத்து?

பச்சைநிறத்திட்டுகள் உண்டாகிய உருளைக்கிழங்கில் கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) எனும் நச்சுக்கள் இருப்பதால், தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
கருவுற்ற பெண்கள் சாப்பிட்டால், கருச்சிதைவை ஏற்படுத்துவதுடன், பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related posts:

காகம் வெளிப்படுத்தும் மரணத்தின் முதல் அறிகுறி இதுதான்
அமெரிக்காவை அலறவிட்ட கொல்லிமலை சித்தர்..! பலரும் அறியாத ரகசிய உண்மைகள்!!
குறிப்பாக ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது! ஏன் தெரியுமா?
சமையல் அறையின் கடுமையான துர்நாற்றம்: போக்கும் எளிய வழி
விமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்கலாம் தெரியுமா?
உங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...