ஒரே இரவில் மென்மையான தலைமுடியைப் பெற வேண்டுமா?

குளிர்காலம் என்பதால் தலைமுடி அதிகம் வறட்சியடையும். வறட்சியான தலைமுடி மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே பலரும் தலைக்கு குளித்த பின் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கண்டிஷனர்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதைப் பயன்படுத்த பலரும் அஞ்சுவார்கள்.


ஆனால் இயற்கை வழிகளின் மூலம் தலைமுடியின் மென்மைத்தன்மையை அதிகரிக்க நினைத்தால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. மேலும் தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். இங்கு ஒரே இரவில் தலைமுடியின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும் ஹேர் மாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து தான் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்: தேங்காய் பால் – 1 கப் அர்கன் ஆயில் – சில டேபிள் ஸ்பூன்

ஸ்டெப் #1 முதலில் ஒரு பௌலில் தேங்காய் பால் மற்றும் அர்கன் ஆயிலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் இரவில் படுக்கும் முன், அதை தலைமுடியில் நன்கு படும்படி, முடியின் முனை வரை தடவ வேண்டும்.

ஸ்டெப் #3 பின் ஷவர் கேப் கொண்டு தலையை கவர் செய்ய வேண்டும். வேண்டுமானால் 1 மணிநேரம் கழித்து தலைமுடியை ஷாம்பு பயன்படுத்தி அலசலாம். இல்லாவிட்டால், இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

ஸ்டெப் #4 பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும். இப்படி ஒருமுறை செய்தாலே, முடியின் மென்மைத்தன்மையில் மாற்றத்தைக் காணலாம். இந்த ஹேர் மாஸ்க்கை சுருட்டை முடி கொண்டவர்கள், வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.

Related posts:

புடலங்காயில் இவ்வளவு மருத்துவக் குணங்களா? தெரிந்து கொள்ளுங்கள்
நீண்ட நேரம் தொடரும் விக்கல்... அதனை தடுத்து நிறுத்துவது எப்படி?
தினசரி உடலுறவு வைத்துக்கொள்வதால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்!
விரைவாக விந்து வெளியேறும் பிரச்சனையை உடனடியாக நீக்க இத சாப்பிடுங்க!
அனைவரும் அறிய வேண்டிய எளிமையான பாரம்பரிய வீட்டு வைத்தியங்கள்
உடலில் இந்த பகுதிகளில் வலி ஏற்பட்டால் கவனமாக இருங்கள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...