தனியாதான் இருக்கேன்.. ஆனா திருப்தியா இருக்கேன்.. ஓவியா

யாருடனும் இல்லை தற்போது தனியாக திருப்தியாக இருக்கிறேன் என்று நடிகை ஓவியா ட்வீட் போட்டுள்ளார். களவாணி படத்தில் நடித்த ஓவியா அதிகம் ஹிட் படங்களில் நடித்ததில்லை. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு அதிக ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு, ஓவியாவின் நடவடிக்கைகள் பலருக்கும் பிடித்துப்போக ஓவியா ஆர்மியை ஆரம்பித்து ஆதரவு கொடுத்தனர் அவரது ரசிகர்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அந்த வீட்டில் இருந்த ஹவுஸ்மேட் ஆரவ்வை ஓவியா காதலிப்பதாக கமலிடம் சொன்னார். தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் சொல்லியிருந்தார்.

ஓவியா – ஆரவ் காதல்
ஆரவ் உடனான காதலே அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் ஓவியா ஆர்மியினர் சோகமடைந்தனர். ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று நம்பிக்கொண்டுள்ளனர்.

ஓவியா வீடியோ
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஓவியா, ரசிகர்களை சந்திக்கும் போதும், அவரே பேசி வெளியிட்ட செல்ஃபி வீடியோவிலும் தான் ஆரவ்வை காதலிப்பதாக சொல்லியிருந்தார். அது தனது விருப்பம் தயவுசெய்து அதைப் பற்றி யாரும் கேட்கவேண்டாம் என்றும் சொல்லியிருந்தார்.

ஓவியா ட்வீட்
காதல் பற்றிய தனது முடிவில் உறுதியாக இருந்த ஓவியா தற்போது ‘சிங்கிள் மற்றும் திருப்தி’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஓவியா, ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

அன்புக்கு நன்றி
நீங்கள் எல்லோரும் என் மீது கொட்டிய அன்புக்கும், காட்டிய அக்கறையையும் விவரிக்க என்னிடம் வார்த்தையே இல்லை. ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

உங்களுடைய அன்புக்கு, நான் மேலும் பொறுப்புடையவளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நன்றிகள் என்று பதிவிட்ட ஓவியா தற்போது தனது நிலையை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான்
தியேட்டர் இருட்டுக்குள் என் மார்பை கசக்கினார்கள் - நடிகை பளீர் பேட்டி
நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, காஜல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நீ மூடு மொதல்ல – ரஜினி ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி
காயத்திரி ரகுராமின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது : அடச்சீ கேவலம்.!!
ஜிம்மிலேயே கிடந்து உடல் இளைத்த இஞ்சி இடுப்பழகி!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...