நரை முடியை வளரவிடாமல் செய்யும் மூலிகை எண்ணெய் – பாட்டி சொன்ன வைத்தியம்!!

தேவையானவை:

 • சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப் அளவு
 • நெல்லிக்காய் பெரியது – 4
 • மருதாணி இலை – கைப்பிடி அளவு
 • கருவேப்பிலை- 1 கப் அளவு
 • செம்பருத்தி இதழ்கள் – 2 பூக்கள்
 • சீரகம் – 4 ஸ்பூன்
 • கிராம்பு – 3

செய்முறை:

முதலில் நெல்லிக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கருவேப்பிலையையும் நறுக்கிக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழை பிரித்து நன்றாக தண்ணீரில் அதன் மேலுள்ள மருந்துகள் போகும் வரை அலசிக்க் கொள்ளுங்கள்.

சீரகம் கிராம்பையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் எண்ணெயை சூடாக வேண்டும். அதில் நெல்லிக்காய், மருதாணி கருவேப்பிலை ஒன்றன்பினொன்றாக போடவும். அதன் நிறம் மாறி அடியில் தங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

அதன்பின்னர் செம்பருத்தி இதழ்களை போடவும். அதன் நிறம் பழுப்பாக மாறும். உடனே சீரகம், கிராம்பையும் போட்டு ஒரு நிமிடம் குறைந்த தீயில் வையுங்கள். பின்னர் இறக்கி ஆறவிடவும்.


ஆறிய பின் ஒரு சுத்தமான துணியினால் வடிக்கட்டி அந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.இதனை வாரம் 3 அல்லது 4 நாட்கள் உபயோகிக்கலாம். பிறகு நரைமுடி, முடி உதிர்தல் , பாதிப்பில்லாமல் முடி அடர்த்தியாகவும் வளரும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முடி வளர ; பலர் வெற்றிகண்ட 23 இயற்கை வழிகள்!.

அவள் கருப்பாய் இருக்கிறாள். ஆனால் கூந்தலின் நெடிய வளர்ச்சி அவளை மிடுக்காய் அல்லவா நடைபோட வைக்கிறது. நானும் எடுப்பாய் இருக்கிறேன். ஆனால் கூந்தல் மட்டுமோ அரைத்து வழித்த துவையல் போல கையளவு உள்ளதே… என்றும் ஏக்கமுறும் பெண்களுக்குத்தான் இந்த இயற்கை முறை வைத்தியம்….
1.சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.
2.ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
3.கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
4.கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.
5.சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.
6.செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.
7. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும் .
8.வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.
9. தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும் . இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.
10. மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள் . இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.
11. வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள் . அடிக்கடி பயன்படுத்திவர ,முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும் .
12. 1 ஸ்பூன் இஞ்சில்ச் சாற்றில் சிறிது தேன் கலந்து அதிகாலையில் சாப்பிட்டுவர, பித்த நரை, மற்றும் இளநரை மறையும்.
13. பாதாம் எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில் (scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும் .
14. வேப்பிலையை தண்ணீர்லிட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் தலையைக் கழுவி வர முடி வளர்ச்சி அடர்த்தியாகும்.
15. பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.
16. முடி நன்கு வளர முடி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, இயற்கை முறை ஷாம்புகளையே (natural shampoo) உபயோகியுங்கள்.
17. தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.
18. அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp) செய்து வாருங்கள்.
19. மஹா பிருங்கராஜ தைலம்’ அல்லது ‘நெல்லிக்காய் தைலம் இவைகளைக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்திட, முடி தாராளமாக வளரும்.
20. உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
21. கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின் வேர்க்காலில் (scalp) மசாஜ் செய்துவர தலைமுடி கருமையாய் வளரும்.
22. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.
23. பெருஞ்சீரகத்தை(சோம்பு) விழுதாய் அரைத்து, வாரம் மூன்றுமுறை தலையில் தேய்த்துக் குளித்துவர, முடி கருமையாய் வளரும்……!

Related posts:

வெயில் காலத்தில் சன் ஸ்கிரீன் அவசியமா?
எந்த முட்டை சாப்பிட ஆரோக்கியமானது தெரியுமா..?
லிப்ஸ்டிக் போடுவதால் நோய் வருமா?
கேரள அழகு ஆயுர்வேத சிகிச்சை முறை .. அட அதுதான் அவளவு அழகா..
அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!
சர்க்கரை நோயாளிகள் பற்களை ஆரோக்கியமாக பராமரிக்க சில பயனுள்ள டிப்ஸ்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...