சாப்பிட வரும் பெண்களின் பிரா சைஸ்-க்கு ஏற்ப டிஸ்கவுன்ட் தரும் சீன உணவகம்!

ஆஃபர் என்றால் என்ன விலையென்றே விசாரிக்காமல் வாங்கிடும் பழக்கம் நம்மிடையே பலருக்கும் உண்டு. அதே போல, வியாபாரிகள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏராளமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அதோடு இல்லாமல்  மக்களின் கவனத்தை திசை திருப்ப பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகிறார்கள்.

chinese restaurant announces bra size discount

எப்போதுமே வித்யாசமான முறையில் மக்களை கவர்ந்து வரும் சீனாவில் உள்ள ஓர்த உணவகத்தில்  ஓர் ஆஃபரை அறிவித்திருக்கிறார்கள். இப்படி தங்களின் ஹோட்டலுக்கு அதிகப்படியான மக்கள் வர வேண்டும் என்ற எண்ணத்தில் சீனாவில் உள்ள ஹோட்டல் ஒன்று விசித்திர ஆஃபரை அறிவித்துள்ளது.

சீனா உணவகம் :

சீனா உணவகம் :

சீனாவில் இருக்கும் ஹாங்க்ஜூ மாகாணத்தில் இருக்கும் ஒரு மாலில் இருக்கிறது ட்ரெண்டி ஷிரிம்ப் என்ற ரெஸ்ட்டாரண்ட். இங்கு கடந்த வாரத்தில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்ட்டரால் பயங்கர பரபரப்பு கிளம்பியுள்ளது.

5 முதல் 65 சதவீதம் வரை :

5 முதல் 65 சதவீதம் வரை :

பெண்கள் அணியும் ப்ரா சைஸ் அளவுப்படி அவர்களுக்கான ஆஃபர் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டது. ப்ரா சைஸ்ப்படி அவர்களுக்கு ஐந்து சதவீதம் முதல் 65 சதவீதம் வரை ஆஃபர் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காத்திருக்கும் நகரம் :

காத்திருக்கும் நகரம் :

பெண்கள் உள்ளாடைகளுடன் இருப்பதாக கார்ட்டூன்களாக சித்தரிக்கப்பட்டு, விளக்கப்பட்டிருந்த போஸ்டரில் ‘மார்பகங்களுக்காக இந்த நகரம் காத்திருக்கிறது’என்றும் எழுதப்பட்டிருந்தது. இது ஆபாசமான விளம்பரம் என்றும் பெண்களை கீழ்மை படுத்தும் செயல் என்றும் பலரும் எதிர்ப்பு காட்ட ஆரம்பித்தனர்.

மறைக்க ஒன்றுமில்லை :

மறைக்க ஒன்றுமில்லை :

அதே நேரம் இந்த விளம்பரம் போட்டதிலிருந்து தங்கள் ரெஸ்டாரண்ட்டுக்கு வருகிறவர்கள் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக ரெஸ்ட்டாரண்ட்டின் மேனேஜர் தெரிவித்துள்ளார். அதைவிட சில பெண்கள் இதனை வரவேற்றார்கள் என்றும் எங்களிடம் மறைக்க ஒன்றுமில்லை என்று தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார்.

முதன்முறையல்ல :

முதன்முறையல்ல :

ஆனால் மக்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஹோட்டல் நிர்வாகம் போஸ்ட்டரை எடுத்துவிட்டனர். சீனாவில் விசித்திரமான ஆஃபர்களை வழங்கி சர்ச்சையாவது இது முதன்முறையல்ல.

Related posts:

கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரித்த விசித்திர மனிதர்
மரபணு தாக்கத்தால் ஓநாயாக வாழ்ந்து வரும் விசித்திர குடும்பம்!
ஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள் கொண்ட வினோத கிராமம்
இனிமேல் லவ், செக்ஸ், கல்யாணம் எல்லாமே ரோபோட் உடன் தான்!
120 மனைவி, 203 பிள்ளைகள்… கடவுளின் நேரடி உத்தரவு என லீலை புரிந்த ஆப்ரிக்க போதகர்!
தண்ணீருக்காக பல திருமணம் செய்யும் வினோதமான மகாராஷ்டிரா கிராமம்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  4.8K
  Shares
Loading...