உடலுறவு, தாம்பத்தியம் – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

ஆங்கிலத்தில் இன்டர்கோர்ஸ் என்பது பொதுச்சொல். இது போக இரு உடல் இணையும் உறவை லவ் மேக்கிங் மற்றும் ஹேவிங் செக்ஸ் என இரு சொல்லாடலில் கூறுவர். இதை நாம் தமிழில் தாம்பத்தியம் மற்றும் உடலுறவு என எடுத்துக் கொள்ளலாம்.

மேலோட்டமாக காணும் போது, இரண்டிலும் வெறும் வாக்கிய, வார்த்தை வேற்றுமை மட்டுமே நாம் உணர முடியும். ஆனால், சற்று உற்று நோக்கினால், அதனுள் மனம், உணர்ச்சி சார்ந்த விஷயங்கள் புதைந்திருப்பதை நாம் அறிய முடியும்.

அப்படி என்ன இந்த இரண்டுக்கும் மத்தியில் வேற்றுமை இருந்துவிட போகிறது என சிலர் எண்ணலாம். ஒருவேளை இதை படித்து முடித்த பிறகு, தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கும்? உடலுறவில் ஈடுபடுவதற்கும்? என்ன வித்தியாசம் என பிரித்து அறியும் நிலை உங்களுக்கு பிறக்கலாம்…

சூழல்!

சூழல் அமைந்து வரும் போது இணைவது தாம்பத்தியம். அது காதலின் வழியே கூடுதல். சூழலை அமைத்துக் கொண்டு கூடுதல் உடலுறவு, இச்சையின் வழியே கூடுதல் இது.

ஒரு அழகான மாலை நேரம், தூரலில் நனைந்து வந்த பொழுதில் உடல் சிலிர்ப்பு காந்தமாய் ஈருடலை இணைக்க செய்வதாக இருக்கமால், வெற்றி, மகிழ்ச்சி, சோகம், என பல்வேறு உணர்ச்சி சூழலின் வெளிப்பாடாக அமையலாம், இது தாம்பத்தியம்.

இருவர் கட்டித் தழுவுதலை கண்டு, இச்சை காட்சிகள் காண்பித்து, உடல் வருடி உரசி, தேகம் எனும் சதையை பிசைந்து சூழலை செயற்கையாக உண்டாக்கி இணையும் அனைத்துமே உடலுறவு தான்.

–> காதல் <–

மனதின் வழியே இனைந்து பிறகு கூடுதல் தாம்பத்தியம். உடலின் வழியே மட்டும் கூடி பிரிவது உடலுறவு.

ஏதோ ஒரு உணர்ச்சி மனதை பிணைய செய்து, அதன் பால் கட்டிலில் ஆரத்தழுவி உடல் இணைவது தான் தாம்பத்தியம். சிற்றின்ப காரணத்திற்காக உடலை மட்டுமே இணைந்துக் கொள்வதன் பெயரே உடலுறவு.

காதலின் வழியே இணைவது தாம்பத்தியம், இச்சையின் வழியே இணைவது உடலுறவு.

எடுத்தோம், கவிழ்த்தோம்!

எடுத்தோம், கவிழ்த்தோம்!

ஒரு காட்சியில் துவங்கி, பிறகு இணைந்து அடுத்த காட்சிக்கு நகர்வது தாம்பத்தியம். உடல் இணைதல் மட்டுமே காட்சியாக அமைவது உடலுறவு.

ஒரு சூழல் / காட்சி ஆண், பெண் மனதை இணைத்து, அதன் பால் நகர்ந்த சில காதல் காட்சிகளுக்கு பிறகு கூடுதல் தாம்பத்தியம். உடல் கூடுவதை மட்டுமே காட்சியின் ஆரம்பம் மற்றும் முடிவாக கொண்ட ஒற்றை காட்சி உடலுறவு.

ஈருடல் இணைந்து பிணைய ஒரு ஆசை வரும், அது முடிந்தவுடன் ஆடை அணிந்து நகர்வது வெறும் உடலுறவே!

பேசி மகிழ்ந்து, கூடி குலவிய பிறகு மீண்டும் பேசி மகிழ்தல் தாம்பத்தியம்.

முடிவு!

முடிவு!

முடிவில் காதல் அடுத்த நிலைக்கு உயர்ந்திருந்தால்… மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிருந்தால், பாரமற்ற நிலையால் இரு உடல் நிலத்தில் மிதந்திருந்தால்…. அது தாம்பத்தியம்.

எப்படியோ அனுபவித்தாயிற்று… அடுத்த வாய்ப்பு எப்போதோ, சூழல் எப்போது அமையுமோ என்ற எண்ணம் எள்ளளவு மனதை சூழ்ந்திருந்தாலும் அது வெறும் உடலுறவே.

திருமணமான பலரும் உடலுறவில் மட்டுமே ஈடுபட்டு வரலாம்… திருமணம் செய்யாத காதலர் கூட தாம்பத்தியத்தில் ஈடுப்பட்டு வரலாம்.

மனதால் இணைதல் தாம்பத்தியம், வெறும் உடலால் மட்டும் இணைதல் உடலுறவு.

Related posts:

ஆண்களால் புரிந்து கொள்ள முடியாத பெண்களின் விசித்திர குணங்கள்!!!
பெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும்
பொண்ணுங்க அதில் எப்படி இருக்கனும்? ஆண்களே சொல்றாங்க கேளுங்க!!
அவன் அனுபவித்த பெண்களில் 6வது நான் என்பது தெரியவந்தது... நிஐ சம்பவம்.!!
தாம்பத்தியத்தில் பிரச்சினை உள்ள ஆண்கள் இதைக்குடித்தாலே போதுமாம்..
கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares
Loading...