உடல் எடையை குறைக்க நீங்கள் குடிக்க வேண்டிய 13 பானங்கள் எவை தெரியுமா?

உடல் எடை அதிகரிப்பு இந்த காலத்தில் பலர் சந்திக்கக் கூடிய சாதாரண பிரச்சனைகளில் ஒன்று. இதற்கு முழு காரணம் நம் உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவினால் அவர்கள் ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இந்தக் காலத்தில் உள்ள துரித உணவு வகைகள் அனைத்து வயதினரையும் உடல் பருமன் அதிகரிக்கச் செய்து பெரும் அவதிப்பட வைக்கிறது. அதிகரித்த உடல் எடையைக் குறைக்க இப்போது பலரும் உணவுக் கட்டுப்பாடு என்று சரியாக சாப்பிடாமல் பட்டினி கிடப்பவர்களும் இருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்வது அடுத்த ஒரு வழியாக திகழ்கிறது.

உடல் எடை குறைப்பதில் உடற்பயிற்சி சிறந்த வழி தான். ஆனால், ஆரோக்கியமான உணவும் மிக முக்கிய வழியல்லவா. ஆரோக்கியமான உணவு என்றால் அது திட உணவு வகைகள் மட்டுமல்ல, திரவ உணவு வகைகளான ஜூஸ் போன்ற பானங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது போன்ற பானங்களைக் குடிப்பதால் விரைவில் நல்ல பலனை உணர முடியும்.

இங்கே உடல் எடையைக் குறைக்க உதவும் 13 பானங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி பார்ப்போம்..

உடல் எடை

தண்ணீர் தண்ணீர் என்பது நாம் அன்றாடம் குடிக்கும் அத்தியாவசிய ஒன்று. அதை சரியான அளவில் குடித்தாலே நம் உடலுக்கு எந்த பிரச்சனையும் வராது. உடல் எடை குறைப்பதிலும் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அது உடலில் வளர்சிதை மாற்றத்தை சரிவர செய்து உடல் எடை குறைக்க பெரிதும் உதவும்.

எலுமிச்சைச் சாறு எலுமிச்சைச் சாறு செரிமான செயலை துரிதப்படுத்துகிறது. சாப்பிட்வுடன் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் அது உடலில் வேறு எந்த கொழுப்பையும் சேரவிடாது. மேலும், உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைத்துவிடும். எனவே, ஒரு சிறந்த உடல் பருமன் குறைக்கும் பானமாக எலுமிச்சைச் சாறு விளங்குகிறது.

இளநீர் ஒரு கப் இளநீரில் 4 கலோரி உள்ளது. இது கொழுப்பைக் கரைய செய்யும். உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்களை நீக்கிவிடும். மற்ற பானங்களை விட கலோரி குறைவாக உள்ள இளநீர் உடல் பருமனை குறைக்க சிறந்தது.

தர்பூசணி ஸ்மூத்தி தர்பூசணி சாப்பிட்டால் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். தர்பூசணியில் கலோரி குறைவு, ஆனால் நீர் அதிகம். உடல் எடை குறைப்பதில் மிகவும் உதவுக்கூடியது. எனவே, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயம் தர்பூசணி சாப்பிடுவதை மறந்துவிடாதீர்கள்.

ஐஸ் புதினா டீ வயிற்று கொழுப்பை குறைக்கும் அற்புதமான பானம் ஐஸ் புதினா டீ. எந்த விதமான உணவு சாப்பிட்டுவிட்டு இந்த டீ குடித்தாலும் உடனே செரிமானம் ஆகிவிடும். உடலில் கொழுப்பை சேரவிடாது.

அன்னாச்சிப்பழம் அன்னாச்சிப்பழத்தில் ப்ரோமெலைன் எனும் என்சைம் உள்ளது. இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் சிறந்த நச்சு நீக்கியாகவும் செயல்படுவதால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும். உடல் எடை குறைக்க விரும்புவோர் அன்னாச்சிப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்க

க்ரீன் டீ க்ரீன் டீயில் கேட்டசின் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் வயிற்றுக் கொழுப்பை குறைக்க உதவும். உடல் பருமன் குறைப்பதில் க்ரீன் டீ பெரிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் க்ரீன் டீ குடித்தால் கொழுப்பைக் குறைக்கும் தன்மையை மேம்படுத்தி விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

டார்க் சாக்லேட் ஷேக் டார்க் சாக்லேட் ஷேக் ஒரு டம்ளர் குடித்தால் சாப்பாடு சாப்பிட்டதற்கு சமம். அதில் 400 கலோரி இருப்பதால் சாப்பாட்டிற்கு இணையாகக் கருதப்படுகிறது. மேலும், டார்க் சாக்லேட் ஷேக் குடித்தால் அவ்வளவு எளிதில் பசியே எடுக்காது. இதில் உள்ள பாலிபினால்ஸ் அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பாலில் உள்ள கால்சியம், உடல் எடையை அதிகரிக்கும் கால்சிட்ரால் எனும் ஹார்மோனை தடுத்துவிடும். மேலும், பசியைக் கட்டுபடுத்தி உடல் எடை கூடுவதைத் தடுக்கும்

காய்கறி ஜூஸ் சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் காய்கறி ஜூஸ் குடித்தால், நீங்கள் எப்பொழுதும் சாப்பிடுவதை விட குறைவாக சாப்பிடுவீர்கள். இதனால் கலோரிகள் உங்கள் உடலில் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம். கொழுப்பைக் கரைக்கக்கூடிய அமிலங்களை இது சுரக்கிறது.

காபி காபி குடிப்பதால் பசியை கட்டுப்படுத்தி வளர்சிதையை அதிகரித்து உடல் எடை குறைய செய்யும். காபியில் உள்ள காஃபின் அதிக ஆற்றலைத் தந்து நாள் முழுவதும் சுறுசுறுபாக இருக்க உதவும்.

தயிர் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்திகள் தயிரில் உள்ள கெட்டித்தன்மை எளிதில் பசியை போக்கிவிடும். இந்த ஸ்மூத்தி 61% அதிகப்படியான கொழுப்பையும், 81% கெட்டக் கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. தயிரில் உள்ள கால்சியம் உடலுக்கு தேவையான கொழுப்பை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற கொழுப்புகளை வெயேற்றிவிடும்.

வே புரோட்டின் உடல் பருமன் குறைக்க டயட் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக இந்த வே புரோட்டினை சாப்பிட்டால் அதிக கொழுப்புகளை கரைக்கலாம். வே புரோட்டின் சாப்பிடுவதால் ஒரு விதமான ஹார்மோன் சுரக்கும். அந்த ஹார்மோன் பசி அடிக்கடி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.

Related posts:

ஒரே நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமா?
குழந்தை பெற்றதும் குண்டாக மாறிவிட்டீங்களா.? கவலையை விடுங்க... தீர்வு இதோ
அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?
நீர்ச்சத்து நிறைந்த காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்
தாம்பத்திய வாழ்வில் தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள்!
வாழைப்பழம் சாப்பிடுபவரா நீங்கள் ..? உங்களுக்கான ஓர் முக்கிய செய்தி
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...