பெண்கள் உறவில் இணைய வெறுக்கும் 7 வகையான ஆண்கள்!

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி! இது மிக பிரபலமான சினிமா வசனம். ஆனால், இது ஆண்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம்.

சில ஆண்கள், பெண்கள் ஆண்களுடன் பேசினால் சாதாரணமாக பார்பார்கள். சில ஆண்கள், அதை கொச்சையாகவும், பச்சையாகவும் பேசுவார்கள். சிலர் அதை சோசியலாக எடுத்துக் கொள்வார்கள், ஆணும், பேணும் பழகுவது ஒன்றும் தவறில்லையே என்பார்கள். இப்படி,

சாதாரணமாக பேசுவதிலேயே ஒவ்வொரு ஆணின் பார்வையும் பலவாறு வேறுபடுகிறது. இதே, உறவு என்று வரும் போது, ஒட்டுமொத்தமாக இவர்களது எண்ணம் எவ்வாறு இருக்கும்.

இவர்கள் எப்படி பெண்களுடன் பழகுவார்கள் என்று வரும் போது, 7 வகையான ஆண்களை கண்டாலே எங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது, அவர்களுடன் உறவில் இணைவது எல்லாம் சாத்தியமற்றது என்கிறார்கள் பெண்கள்…

வகை #1
உயர்ந்தோன் என்ற எண்ணம்! நான் தான் பெரியவன், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என ஆண் ஆதிக்கத்தை உறவில் செலுத்தும் ஆண்களுடன் உறவில் இணைய பெண்கள் வெறுக்கின்றனர்.

வகை #2
வாயை மூடி பேசவும்! பேசாமலேயே ஊமை போல இருக்கும் ஆண்கள் மீது பெண்களுக்கு பெரிதாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. பெண்கள் எப்போதும், தாங்கள் சொல்லாமலே தங்கள் பிரச்சனை என்ன என்பதை உணர்ந்துக் கொள்ளும் ஆணை தான் அதிகம் விரும்புகிறார்கள்.

வகை #3
தீராத விளையாட்டு பிள்ளை! எப்போது பார்த்தாலும், இரட்டை அர்த்தம், உடலுறவு சார்ந்த எண்ணம் கொண்டிருக்கும் ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பது இல்லை. உணவில் ஊறுகாய் இருக்க வேண்டும், ஆனால், ஊறுகாயே உணவாக இருக்க கூடாது.

வகை #4
எவனோ ஒருவன்! தான் யார், தனக்கு என்ன வரும், வராது என்பது கூட தெரியாத நபரை. எதிர்கால துணையாக தேர்ந்தெடுக்க பெண்கள் முனைவதில்லை.

வகை #5
மதிப்பு! பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும், பெண்களை தரக்குறைவாக பேசும், நடத்தும் ஆண்களுடன் உறவில் இணைய பெண்கள் வெறுக்கிறார்கள்.

வகை #6
காதல், சாதல்! எதற்கெடுத்தாலும் புலம்புதல், நீ இல்லாட்டி நான் செத்துருவேன் என ப்ளாக்மெயில் செய்யும் ஆண்களுடன் உறவில் இணைய பெண்கள் வெறுக்கிறார்கள்.

வகை #7
சகுனி! சகுனி போன்ற சுபாவம் கொண்டுள்ள ஆண்களை எல்லாம் எப்படி தெரிந்தும் அவர்களோடு உறவில் இணைய முடியும். சான்ஸே இல்லை என்கிறார்கள் பெண்கள்!

Related posts:

கல்யாணமானவங்க மட்டும் இதை படிங்க: மத்தவுங்க வேண்டாம் ப்ளீஸ்!!!
இந்த 8 விஷயம் கட்டின பொண்டாட்டிக்காக ஒரு முறையாவது செஞ்சிருக்கீங்களா?
உங்கள் புது மனைவியிடம் கேட்க வேண்டிய மூன்று முக்கியமான கேள்விகள்!
ஆண்களை எப்படியெல்லாம் பெண்கள் மூட்அவுட் செய்கிறார்கள் தெரியுமா..?
உறவுக்கு முன்பாக சிறுநீர் கழிக்கக்கூடாது என சொல்வது ஏன்..?
இந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால்.. நீங்க தான் அதிர்ஷ்டசாலி..!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  12K
  Shares
Loading...