எலும்புகளை வலிமையாக்கும் முருங்கைக்காய்!

பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை.

மேலும் இது சிறந்த ஊட்டச்சத்தாகவும் செயல்படும். அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப்பாகக் காய்ச்சி குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

முருங்கைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது.

Drumstick_newமேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்பட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்.

தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வந்தால் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும்.

குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல், காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Related posts:

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்! அவசியம் பகிருங்கள்
ஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்! கட்டாயம் படியுங்கள்
மலச்சிக்கல் குணமாக சில ஆலோசனைகள் -அவசியம் பகிருங்கள்
மலச்சிக்கலை போக்கும் காய்: உடனடி பலன் கிடைக்கும்
பல் சொத்தையா கவலைய விடுங்க! உடனடித் தீர்வு!!!
இதுபோன்ற பிரச்சனைகள் நிச்சயம் உங்களிடம் ஒன்றாவது இருக்கும்.. அவசியம் படியுங்கள்.!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  450
  Shares
Loading...