பேய் பயத்தில் ஒட்டுமொத்த ஆண்களும் ஊரைவிட்டு ஓடிய விநோதம்!!!

பாம்பு என்றால் படையே நடுங்கும்; பேய் என்றால் ஊரே நடுங்கும் என்ற பழமொழி தெலங்கானா மாநிலத்தில் உண்மையாகிவிட்டது.

ஆம் பெண் மோகினி பிசாசு உலாவுவதாகக் கூறப்பட்டதால் பயந்துபோன ஒரு கிராமத்தின் அனைத்து ஆண்களும் பெண்டாட்டி பிள்ளைகுட்டிகளை விட்டுவிட்டு ஓட்டம் எடுத்து ஊருக்கு வெளியே தாங்கி வாழ்கின்றனர்.

இந்தவிநோத சம்பவம் தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள காசிகுடா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. குக்கிராமமான காசிகுடாவில் மொத்தம் 60 குடும்பங்கள் உள்ளன. கல்உடைக்கும் வேலைதான் இந்த கிராம மக்களின் பிரதான தொழில்.

காசிகுடாவில் மோகினி நடமாட்டம் இருப்பதைப் பார்த்ததாக அங்குள்ள சிலர் கூறினர். அந்த மோகினிப் பிசாசு மோசமான பெண் ஆவி என்றும் ஆண்களைக் குறிவைத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இதனால் பயந்துபோன ஆண்கள் ஒட்டுமொத்தமாக ஊரை காலிசெய்துவிட்டு கிராமத்துக்கு வெளியே கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர்.

மனைவி, பிள்ளைகள் கிராமத்திலேயே தங்கியுள்ளனர். அவர்களும் மாலை ஆகிவிட்டால் வீட்டுக்குள் சென்று பதுங்கிவிடுகின்றனர். இரவுமுழுவதும் வெளியில் தலைகாட்டுவதில்லை.

சில வயதான ஆண்கள் கிராமத்தில் உள்ளனர். மறுநாள் விடிந்து சூரிய வெளிச்சம் வந்தவுடன்தான் வீட்டிலிருப்பவர்கள் வெளியே வருகின்றனர். கடந்த சில நாள்களாகவே இதேநிலைதான்.

இதனிடையே மோகினிப் பிசாசை விரட்டுவதற்கு பேயோட்டம் செய்யும் பூசாரிகள், ஆவிகளுடன் பேசும் ஆள்களைக் கூட்டிவந்து மந்திரிக்கின்றனர்.

இந்தத் தகவல் அறிந்த அப்பகுதி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் காசிகுடாவுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேசி தைரியப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் மோகினிப் பிசாசை விரட்டியடித்து ஊரை சுத்தம் செய்தபிறகுதான் காசிகுடாவுக்கு மீண்டும் திரும்புவோம் என வெளியில் தங்கியிருக்கும் ஆண்கள் தெரிவிக்கின்றனர்.

போலீஸாரும் காசிகுடாவில் இரவுநேரங்களில் ரோந்து சென்று பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

அறிவியல் முன்னேறிய இந்தக் காலத்தில் இப்படியொரு கிராம மக்கள் இருப்பது வியப்பைத் தருகிறது.

Related posts:

நாயுடன் பாலியல் உற­வு­ கொண்டு வீடி­யோவில் பதி­வு­ செய்த பெண்
திருமண மோதிரத்தை ஆண்குறியில் மாட்டி, பரிதவித்த சீன மாப்பிள்ளை!
நரகமாய் மாறிய இரவுகள்: ஒரு பெண்ணின் உண்மை சம்பவம்
ஆசிரியையை மரத்தில் கட்டி வைத்து கற்பழித்த பிச்சைக்காரன் கைது
பெண்ணுறுப்பில் சிக்கிய கணவரின் தலை: ஆபாச இணையதளம் பரப்பிய வதந்தி
நோய்வாய்ப்பட்ட கணவனை, அதோகதியில் விட்டு சென்ற 4 மனைவிகள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...