தேங்காயை அரைக்காமலேயே தேங்காய்ப்பால் எடுப்பது எப்படி?

தேங்காய்ப்பால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு பொருள். இதை நாம் காய்கறிகளோடு சேர்த்து கூட்டாக, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த காமினேஷனாகவும் பயன்படுத்துவோம்.அப்படி நம்முடைய வீட்டில் இடியாப்பம் செய்து கொண்டிருக்கும் போது ஒருவேளை கரண்ட் கட் ஆகிவிட்டால், எப்படி தேங்காய்ப்பால் எடுக்க முடியும்?


கவலைப்படாதீங்க… ரொம்ப சிம்பிளா ஒரு டெக்னிக் இருக்கு. அது தெரிஞ்சா கரண்ட், அம்மி, மிக்சி எதுவும் இல்லாமலே தேங்காய்ப்பால் எடுக்க முடியும்.


தேங்காயை நன்றாக பூப்போல துருவிக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை இறக்கி, துருவி வைத்திருக்கும் தேங்காயை அதில் போட்டு, நன்கு ஓர் அரைமணி நேரத்துக்கு மூடி வைத்து விடுங்கள்.

அரை மணி நேரம் கழித்து, ஒரு மெல்லிய சுத்தமான துணியை எடுத்து ஒரு பாத்திரத்தின் மேல் போட்டு, இதில் ஏற்கனேவே வெந்நீரில் போட்டு வைத்திருக்கும் தேங்காயை்த்துருவலை அந்த துணியில் ஊற்றி நன்கு வடிகட்டுங்கள்.


துணியை நன்கு இறுக்கிப் பிழிந்தால் ஒட்டுமொத்த தேங்காய்ப்பாலும் அந்த பாத்திரத்தில் இறங்கிவிடும்.

இப்போதும் நாம் வழக்கமாக எடுக்கும் கெட்டியான தேங்காய்ப்பாலைப் போன்று நல்ல திக்கான தேங்காய்ப்பால் நமக்குக் கிடைத்துவிடும்.


என்ன! இனிமேல் தேங்காய்ப்பால் எடுக்க கரண்டு, மிக்ஸி எதுவும் தேவையில்லை தானே!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts:

செய்வினை !!!செய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை !
பெண்கள் அதிக நேரம் டி.வி. பார்ப்பது ஆபத்து
பாலியல் உணர்வை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்!
தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை ஏன் வைக்க வேண்டும் எனத் தெரியுமா?
நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏன் ஏற்படுகிறது...?
ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய பாம்பை விட கொடிய விஷங்கள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...