ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து எப்படி தப்பிக்கலாம்?…

மனிதன் உயிர்வாழ உணவு, நீர் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதைவிட அதிகமாக காற்று அவசியம். அந்த காற்றில் இருக்கும் ஆக்சிஜன் போதுமான அளவு மூளைக்குக் கிடைக்கவில்லை என்றால் மூளை செயலிழந்து போகும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

அத்தகைய பிராண வாயுவை உடலுக்கு சரியாகக் கிடைக்கச் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பது நுரையீரல். அந்த நுரையீரலை பாதிக்கும் மிக முக்கியமான நோயாக ஆஸ்துமாவைக் குறிப்பிடலாம்.மூச்சுக்குழாயில் ஏற்படும் நோய்த்தொற்றின் காரணமாக மூச்சுக்குழல்களின் சுவர்கள் சுருங்கி மூச்சுக்காற்றானது இயல்பாச் சென்றுவர தடை ஏற்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசத் தடை உண்டாகிறது. இது இளைப்பு நோய் என்றும் கூறப்படுகிறது.

பரம்பரை வழியாக, அலர்ஜி, புகைப்பிடித்தல், வளர்ப்பு பிராணிகளால் உண்டாகும் அலர்ஜி, புகை மற்றும் காற்று மாசுபாடு போன்ற பல காரணங்களால் ஆஸ்துமா பிரச்னை உண்டாகிறது.

ஆஸ்துமாவுக்கான அறிகுறிகள்
மூச்சுக்குழாய் சுருக்கம்
மூச்சுத்திணறல்
மார்பில் இறுக்கமான உணர்வு
வறட்டு இருமல்
நாசிக்குழியில் வீக்கம்
இதய படபடப்பு
நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயில் சளி படிதல்
உடல்சோர்வு
தொண்டை கமறுதல்
மூக்கில் அடிக்கடி நீர் வடிதல்
தலைவலி

ஆகிய அறிகுறிகள் தென்படும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts:

எந்த முட்டை சாப்பிட ஆரோக்கியமானது தெரியுமா..?
இன்சுலின் இல்லாமல் சீனியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க காலையில் இதனை செய்யுங்கள்!
தினமும் பேரீச்சம்பழம்: நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? ஈஸியா தடுக்கலாம்!
ஒரே நிமிடத்தில் குறட்டை விட்டு தூங்க வேண்டுமா..? இந்த அற்புதமான பானத்தை குடிங்க…!
மாலைக்கண் நோயை தடுத்து, ஆஸ்துமாவை குணப்படுத்தும் பலாப்பழம்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...