பாதங்களை வைத்து பெரும் கோடீஸ்வரியான பெண் – வைரலான புகைப்படங்கள்!

எல்லோரும் மூளையை பிழிந்து யோசித்து தான் நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால், இந்தப் பெண்ணோ கால் பாதங்களை வைத்து ஆயிரக்கணக்கான டொலர்களை அசால்டாக சம்பாதிக்கிறார்.

கனடாவில் வசிக்கும் 32 வயது ஜெஸிகா குட், இன்ஸ்டாகிராம் மாடலாக இருக்கிறார். தன்னுடைய பாதங்களை விதவிதமாக ஒளிப்படங்கள் எடுத்து, விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் டொலர்கள் சம்பாதிக்கிறார்!


“இப்படி வருமானத்துக்கு ஒரு வழி கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து. ஓய்வு நேரங்களில் வேலை வாய்ப்புச் செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பேன். ஒருநாள் பெண் பாதம் மாடல்கள் தேவை என்ற விளம்பரத்தைக் கண்டேன்.

பாதங்களுக்கு மாடல்களா என்று வியந்தேன். இதில் நல்ல வருமானம் இருப்பதாக நினைத்தேன். அதனால் என்னுடைய பாதங்களை தொழில்முறை ஒளிப்படக்காரர்களைக் கொண்டு விதவிதமாகப் படங்கள் எடுத்தேன். அவற்றை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டேன்.

பல நிறுவனங்களில் இருந்து என் படங்களைக் கேட்டு வந்தனர். நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தேன். என் கற்பனையைக் கலந்து பாதங்களைப் படம் எடுப்பதில் வித்தியாசம் காட்டினேன். தினமும் மூன்று படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன்.


அவற்றைப் பார்ப்பவர்கள் உடடியாக தொடர்புகொள்வார்கள். சில படங்களுக்கு அதிக அளவில் போட்டி இருக்கும். அப்போது விலையை அதிகமாகச் சொன்னாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

பாத மருத்துவம், காலணி தொடர்பான வியாபாரங்களுக்கு இந்தப் படங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் என்னை 12 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இன்று என்னுடைய ஆண்டு வருமானம் 70 ஆயிரம் டொலர்கள்.. நானே இவ்வளவு சம்பாதிப்பேன் என்று எதிர்பார்த்ததில்லை. என் வாழ்க்கையே இப்போது மாறிவிட்டது” என்கிறார் ஜெஸிகா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts:

பிணத்துடன் குடித்தனம் நடத்தும் வினோத மக்கள் - மர்மமான தீவு!
போலி மருத்துவரின் சிகிச்சையால் வாழ்க்கையையே இழந்த சிறுவன்!
சாப்பிட வரும் பெண்களின் பிரா சைஸ்-க்கு ஏற்ப டிஸ்கவுன்ட் தரும் சீன உணவகம்!
விசித்திர காரணத்திற்காக வீட்டு வாசல்களில் ஆண்குறி வரைந்து வைத்திருக்கும் கிராமம்!
வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இந்த குகையில் தான் உள்ளதா ?
ஆன்லைனில் மனைவியை 6 கோடிக்கு விற்க முயன்ற கணவன்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...