பெண்களுக்கு ஏன் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது தெரியுமா..?

பெண்களுக்கு இக்காலத்தின் உணவு முறைகளால் பல வகையான உடல் பிரச்சனைகள் வருகின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒன்று தாய்மையின்மை.

ஒரு பெண்ணின் கரு முட்டையானது உருவாக 25 முதல் 28 நாட்கள் வரை ஆகிறது. அந்த நாட்களில் முட்டை குறைவாக உருவானாலோ, அல்லது முட்டைகள் உருவாகவில்லை என்றாலோ, மலட்டுத் தன்மை உருவாகிறது.



இதனைக் கண்டு பிடிக்க முக்கியமாக பெண்கள் தங்கள் மாத விடாய் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

21-35 நாட்களுக்குள் அடுத்த மாதவிடாய் தொடங்கவில்லையெனில் கவனம் அதிகமாக செலுத்த வேண்டும். சீரற்ற மாத விடாய் என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல. கரு முட்டைகள் இத்தனை நாட்களில் உருவாகவில்லையெனில், அது ஒரு எச்சரிக்கைத் தரும் ஒரு முக்கிய அறிகுறியாக அமைகிறது. கரு முட்டை உருவாகவில்லை எனில், கர்ப்பம் தரிக்க வாய்பில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

ஒரு பெண்ணிற்கு 50 வயதிற்குள் மாத விடாய் நின்று விட்டால், அது மிகவும் அதிக அச்சம் தரக்கூடிய விஷயம். பெண்களுக்கு மாத விடாய் இருக்கும் வரை மட்டுமே ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் ஒரு பெண் தன் வெள்ளைக் கரு படிமம் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வெள்ளைக் கரு படிமம் அதிக கெட்டியாக இருந்தால், உடனே மருத்துவர் ஆலோசனைப் பெறுவது நல்லது.

உங்கள் உடலுறவு நேரங்களில் உங்களுக்கு இடுப்புக்குக் கீழே அதிகமாக வலி எடுத்தால், உங்கள் கர்ப்பப்பையில் ஏதோ கோளாறு இருப்பது நிச்சயம். கர்ப்பப்பையில் ஒரு அளவிற்கு மட்டுமே வெப்பம் இருக்க வேண்டும். அந்த வெப்பம் அதிகம் ஆனால், வலி எடுக்கும். இந்த வெப்பம் வலி மட்டும் தருவது அல்ல, அந்த வெப்பத்தை கரு முட்டைகள் தாங்க முடியாத காரணத்தால், அழிந்து போகும். இதுவும் உடலில் மலட்டுத் தன்மை உருவாக முதல் காரணமாக அமையும்.

மருத்துவம்

உடல் எடையில் மாறுபாடு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இது தைராய்டு போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். அதே சமயம், தைராய்டு போன்றவை உடலில் மலட்டுத் தன்மை உருவாக வாய்ப்புகளை அதிகரித்துத் தரும். எனவே, உடல் வியாதிகள் என்னென்னவென்று பார்த்துக் கவனித்துக் கொள்வது ஆரோக்கியமான செயல்.

உடலில், தேவையற்ற புதிய இடங்களில் முடி வளரத் தொடங்கும். பெண்களின் உடலில் சாதாரண மனிதத் தன்மையாக அனைத்து பாகங்களிலும் முடி வளரும், ஆனால், அதிகமாக கண்ணத்திலும், தாடையிலும் வளர்ந்து தாடி மீசை போல தெரிந்தால், அதனை உடனடியாகக் கவனிக்க வேண்டும். இவை மலட்டுத் தன்மையின் அறிகுறிகள்.

மலட்டுத் தன்மையை மனரீதியாக அணுக தேவையில்லை அதுவும் ஒரு சாதாரண உடல் குறைபாடுதான். இதனை ஒரு புற்றுநோய் அளவிற்குப் பெரிதாக எண்ணி பயந்து கொள்ளவும், இதனை அசிங்கமாகவும் கருதுவது தேவையற்ற ஒரு செயல். இக்காலத்திய மருத்துவத்தால், நாம் அனைத்து விதமான வியாதிகளையும் குணப்படுத்தலாம் எனவே இதனை ஒரு பெரிய குறைபாடாகக் கருதி அஞ்ச வேண்டாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts:

7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைப்பதற்கான இலகுவான வழிமுறை
இரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்
2 நாள் குளிக்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
நீர்ச்சத்து நிறைந்த காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்
2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால், கொழுப்பு கரையும்!
வியர்வையை துடைக்காமல் அப்படியே விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Share With Your Social Network
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Loading...