தூக்கமாத்திரை பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்படியாயின் அவசியம் இதைப்படிங்க..

வேலை பார்க்கும் அனைவருக்கும் இருக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் தூக்கமின்மை. சிலருக்கு வேலைப் பளு, ஆரோக்கியமில்லாத வாழ்க்கையினால் தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.


அதனால் சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுவார்கள். இந்த தூக்க மாத்திரை சாப்பிடுவதால் உடம்புக்குத் தான் கேடு வரும்.

தூக்க மாத்திரை ஒரு போதைப் பொருள் மாதிரி, அதை அடிக்கடி சாப்பிட்டால் நாம் அதற்கு அடிமை ஆகிவிடுவோம். அப்புறம் நமக்கு இயல்பாகவே தூக்கம் வந்தால் கூட தூக்க மாத்திரை போடாம, நிம்மதியா தூங்க முடியாது, தூக்கமும் வராது.

தூக்க மாத்திரை சாப்பிட்டால் நாம் சுவாசிப்பதில் பிரச்சனை வரும். மேலும் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு பிரச்சனை இருக்கிற நபர்கள் தூக்க மாத்திரை சாப்பிட வேண்டாம்.

சிலர் தூக்க மாத்திரையை குளிர் பானம் அல்லது மது பானங்களில் கலந்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. மேலும் மது பானக்களில் கலந்து சாப்பிட்டால், சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம். முக்கியமாக தூக்க மாத்திரையை திராட்சை பழ சாறுடன் சாப்பிட வேண்டாம்.


தூக்க மாத்திரை சாப்பிட்டால் அடிக்கடி காலையில் தலைவலி, மயக்கம், சோர்வு, அதிக தாகம் போன்றவை ஏற்படும்.

தூக்கம் அதிகம் வருவதால், பசியைக் கூட மறந்து விடுவோம். இதனால் உடலில் உள்ள சக்தி குறைந்து, தலைச் சுற்றல், உடலில் நடுக்கம் போன்றவை ஏற்படும். ஆகவே தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீர்கள்..!

Related posts:

மர்ம கோட்டையான ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் எப்படி உருவானது தெரியுமா?
உலகில் உள்ள சில அசிங்கமான பாலியல் பழக்கங்கள் -கேவலமான உண்மைகள்
எல்லாரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய உடலுறவு சார்ந்த 8 உண்மைகள்!
வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்!
மலச்சிக்கல் பிரச்சனையா? தினமும் இதில ஒன்று சாப்பிடுங்கள் பிரச்னையும் இருக்காது!
இந்த காய்கறிகள் வாங்கும்போது இதையெல்லாம் கவனிங்க..!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...