இளநீரில் அப்படி என்னதான் சத்து இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..?

இயற்கையின் கொடையான இளநீரில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெயில் காலத்துக்கு ஏற்ற இளநீர் உடலில் உள்ள வெப்பதை தணித்து குளிர்ச்சியை தருகிறது.


இளநீரில் அதிகளவில் பொட்டாசியம், மினரல் உள்ளது. களைப்பை போக்கி சுறுசுறுப்பை தரக்கூடியது. செரிமான சக்தி கொண்டது.

ஆற்றல் மிகுந்த இந்த இளநீரில் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது. காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளது தான் காரணம்.

இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டி விடுகின்றன.

காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய இயற்கை மருந்து.


சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது. இதனால் தான் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் மஞ்சள் காமாலை நோயாளிகளின் சூட்டால் வெளியாகும் மஞ்சள் நிற சிறுநீரை மாற்றவும் இளநீர் தவறாமல் அருந்தச் சொல்லுகிறார்கள்.

இதில் கொழுப்பு இல்லை. சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நோய்கிருமிகலுக்கு எதிராக போராடும் சக்தி கொண்டது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட இளநீரை கோடைகாலத்தில் குடித்து பயன்பெறலாமே.

Related posts:

காலை 8 மணிக்குள் இந்த 8 விஷயத்தை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் படிக்கவும்...!
குழந்தை வளர்ப்பு:குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?
இரவில் பூச்சி கடித்துவிட்டால் என்ன கடித்தது என்று எப்படி கண்டுபிடிப்பது?
தேங்காயை அரைக்காமலேயே தேங்காய்ப்பால் எடுப்பது எப்படி?
உங்க இடுப்புல இந்த வட்டம் இருந்தா அந்த விசயத்தில நீங்கதான் கெத்து!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...