இதுபோன்ற பிரச்சனைகள் நிச்சயம் உங்களிடம் ஒன்றாவது இருக்கும்.. அவசியம் படியுங்கள்.!!

முதுகில் வலி..நாவில் வறட்சி…அடிக்கடி தண்ணீர் குடிக்க தோன்றுவது.. உள்ளங்கையில் வியர்வை..கைகளில் நடுக்கம் இதுபோன்ற பிரச்சனை உங்களிடம் உள்ளதா ?


எப்படி ஏற்படுகிறது மன உளைச்சல்?

நம் உடலில் ஏற்படும் எந்த நோய்க்கும், நமது மனதும் சம்பந்தப் பட்டுத் தான் உள்ளது. மனதில் தைரியம் இருந்தால், எந்த நோயும் நம்மை பெரிதளவில் தாக்காது. ஆனால் மனதில் உள்ள குறைபாடுகள் நமது சிந்தனை ஓட்டத்தை திசை திருப்புகிறது.

இதனால் நாம் தொலைப்பது நமது இயல்பைத் தான். இதனைத் தான் மன உளைச்சல் என்கிறார்கள். இதற்கு தனி மனிதக் குறைபாடே காரணம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நாம் நினைத்தது நடக்காமல், நினைத்ததற்கு மாறாக நடைபெறும் எதிர்மறையான செயல்பாடுகள் நமக்குள் இருந்த எதிர்பார்ப்பைத் தகர்த்தெரிந்து, தீராத மனவலியைக் கொடுக்கிறது.

இது நமது வாழ்க்கைச் சூழலுக்கு எற்ப மாறுபடுகிறது. இதன் அறிகுறியை நம் உடல்நிலையில் ஏற்படும் மாற்றமே காட்டிக் கொடுத்து விடும்:

முதுகு வலி, தோள்களில் ஏற்படும் வலி, தசைகளின் விறைப்புத் தன்மை, விட்டு விட்டு சுவாசம் ஏற்படுதல், நாக்கில் வறட்சி ஏற்பட்டு, அடிக்கடி தண்ணீர் குடிக்கத் தோன்றும் தன்மை, உள்ளங்கையிலே தோன்றும் வியர்வை, விரல் சில்லிட்டுப் போவது, வயிற்றில் இனம் புரியாத வலி, கைகளில் அனிச்சையாக ஏற்படும் நடுக்கம், தேவையில்லாமல் அடிக்கடி சிறு நீர் கழித்தல்-

இவையெல்லாம் நமக்குள் ஏற்பட்டுள்ள மன உளைச்சலைக் காட்டிக் கொடுத்து விடும் காரணிகள். மேலும் சிலருடைய இயல்பான நடவடிக்கைகளைக் கண்டும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு ஏற்பட்டு விட்டதே என்று மன உளைச்சலுடன் இருப்பவர்களை, ஏதோ மன நோயாளிகள் போலக் கருதத் தேவையில்லை.

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும், எப்படிப் பட்டவர்களுக்கும், அவர்களது வாழ்வில் சூழ்நிலைகளுக்கேற்ப, மன உளைச்சல் ஏற்படுவது இயற்கையானது. மன உளைச்சல் இல்லாத மனிதர்களே கிடையாது. ஆனால், அப்படிப்பட்ட மன நிலையில், நமது செயல்பாடுகள் அனைத்திலும் நிச்சயம் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும். அதில் தான், மன உளைச்சலுக்கான மருந்து இருக்கிறது.


அடிக்கடி புகை பிடித்தல், நரம்புகளைத் தூண்டும்; காபி, தேநீர் போன்றவற்றை அடிக்கடி பருகுதல், தலை முடியை விரலால் பிடித்து இழுத்தல், வாகனங்களை முரட்டுத் தனமாக ஓட்டுதல், மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பது, யாரிடமும் பேசாமல் ஒதுங்கியே இருப்பது, எளிதில் உணர்ச்சி வசப்படுவது, தேவையில்லாத கோபம், குடும்பத்தினரோ, நெருங்கிய உறவினரோ பேச்சுக் கொடுத்தால் அவர்களையே எடுத்தெறிந்து பேசுவது, எதிர்றையாகப் பேசுவது என, மன உளைச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களைத் தாங்களே காட்டிக் கொடுக்கும் தன்மை உடையவர்களாக இருக்கின்றனர்.

மனதளவில் சோர்ந்திருக்கும் இவர்களைத் தொந்தரவு செய்வதை விரும்ப மாட்டார்கள். இது நோய் அல்ல. மனித இனம் எல்லாவற்றிற்கும் ஏற்படும் தனி மனிதக் குறைபாடு தான். இவற்றுக்கு மருந்தும் நமது மன மாற்றம் தான்.

மனக் குறைபாடுகளை யாரிடமும் சொல்ல இயலவில்லை என்றால், ஒரு வெள்ளைத் தாளில் மனதில் உள்ளதை எல்லாம் எழுதி அதை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும். பின் அதனைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டு, 1-லிருந்து 10 வரை நிதானமாக மனதிற்குள் எண்ணுங்கள்.

பின் ஒரு நிமிடம் நீங்கள் இருந்த இடத்திலேயே கண்களை மூடிக் கொண்டு நீங்கள் கலகலப்பாக சிரித்த தருணங்களை உங்கள் மனத் திரையில் கொண்டு வாருங்கள். பிடித்த பாடலை வாய் விட்டுப் படியுங்கள். உங்கள் மனம் மாறி மகிழ்ச்சியைத் தேடும்!

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related posts:

பல்வலிக்கு உடனடி நிவாரணம்: இதை செய்திடுங்கள்
தினமும் உணவில் பச்சை மிளகாய் சேர்ப்பதால் இவ்வளவு நன்மையா..?
இஞ்சி குளியல் முறை தெரியுமா இந்த அற்புத மாற்றங்கள் நிகழுமாம்!
ஒற்றை தலைவலி குணமாக எளிய மருத்துவக்குறிப்புகள் - வீடியோ பகிருங்கள்
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? இத செய்த ஈஸியா தடுக்கலாம்!
3 நாட்களில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இத சாப்பிடுங்க!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...