ஆங்கிலேயனையே ஏமாற்றிய ஒரே தமிழ் பெண் யார் தெரியுமா..?அறியாத தகவல்.!!

ஒரு இந்திய பெண் உலக அழகியாக பட்டம் பெற்ற இதே சமயத்தில் இன்னொரு பெண்ணை பற்றி கூற கடமை உள்ளது


சரஸ்வதி ராஜமணி. குழந்தை வயதில் காந்தியுடன் அஹிம்சை பற்றி விவாதம் செய்தவர். இளம் வயதில் ஐ.என்.ஏ(INA) உளவாளியாக பணியாற்றியவர். அதிகம் பேசப்படாதா பெண் சாதனையாளர்.

சரஸ்வதி ராஜமணி பர்மாவில் வசித்த பெரும் செல்வந்தரின் தமிழ்மகள். தன் 16 வயதில் நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னிடமிருந்த தங்கத்தையும், வைரத்தையும் நிதியாக நேதாஜி கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்திற்கு கொடுக்கிறார்.

இதை கேள்விப்பட்ட நேதாஜி அந்த நகைகளுடன் அவர் வீட்டிற்கு வந்து தந்தையிடம் “விவரம் தெரியாத இளம் பெண் ஆர்வத்தில் நகையை கொடுத்துள்ளார், இதை திரும்ப வாங்கி கொள்ளுங்கள்” என்று கொடுக்கிறார். இல்லை அது என் நகை, திரும்ப வாங்க முடியாது ராஜமணி பதில் அளிக்கிறார்.

அவரது ஆர்வத்தை கண்ட நேதாஜி அவரை ஐ.என்.ஏ(INA)வின் உளவு பிரிவில் இணைத்து கொள்கிறார்.

இளம் வயதில் உளவாளியாகிறார். மணி என்ற பெயரில் ஆணாக உளவு பார்த்து ஒருமுறை ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் துப்பாக்கி தோட்டாவுடன் தப்பிக்கிறார்.

அதன் பின் நேதாஜியின் பெண்கள் படையணியில் முக்கியமானவராக அறியப்பட்டவர். சுதந்திரத்திற்கு பின்னும் நேதாஜி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு இன்றும் போராடுகிறார். டெல்லியில் அது சமந்தமான பேரணி என்றதும் உற்சாகமாக கிளம்பி வந்தவர்.

90 வயதாகிறது. உடலில் முன்பிருந்த வலு இல்லை. குடும்ப உறவுகள் அதிகம் இல்லை. மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படவுமில்லை.

அரசாங்கத்தின் பென்சனில் வாழ்கிறார். சென்னையில் சுனாமி வந்த போது சேர்த்து வைத்த பென்சன் தொகையும் நிவாரணத்திற்கு கொடுத்துள்ளார்.

காலை முதல் மாலை வரை போராட்டத்தில் நிற்கிறார். கிடைக்கும் உணவை சாப்பிடுகிறார். அவரை சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்திருக்கிறார். இந்தி, ஆங்கிலம் சரளமாக பேசுகிறார். கையெழுத்து கேட்பவர்களுக்கு தமிழில் கவியெழுதி கையெழுத்திடுகிறார்.


முதுமை, வறுமை, தனிமை, வெறுமை எதுவும் அவரை கலங்க வைக்கவில்லை. ஆனால் நேதாஜி பற்றியும் அவர்களது விடுதலை போராட்டம் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது அழுகிறார். ஆம் ஒரு உண்மையான போராளிக்கு அது தானே செல்வம், அது தானே இழப்பு.

இந்தியா தன் புதிய உலக அழகியை கொண்டாடிக்கொண்டிருந்தது. இப்போது அம்மா சரஸ்வதி ராஜமணி அழகியாக தெரிகிறார்..

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related posts:

வேகமாக பகிருங்கள் !விஷமாக மாறும் சர்க்கரையின் கசப்பான உண்மை
சுண்டு விரலில் இந்த மூன்று பகுதிகள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
விமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்கலாம் தெரியுமா?
இந்த காய்கறிகள் வாங்கும்போது இதையெல்லாம் கவனிங்க..!
பெற்றோர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மகளின் கடிதம்! ஒவ்வொரு அப்பாவும் கட்டாயம் படியுங்கள்..!
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...