மும்பை ‘ரெட் லைட் ஏரியா’ பற்றி நீங்கள் அறிந்திராத சில அதிர்ச்சி தகவல்கள்

மும்பை ‘ரெட் லைட் ஏரியா’ பற்றி நீங்கள் அறிந்திராத சில அதிர்ச்சி தகவல்கள்விபசார தொழிலை எந்த ஒரு பெண்ணும் விரும்பி செய்வதில்லை. அவர்களது சூழ்நிலைதான் விபச்சாரம் என்கின்ற புதை குழியில் அவர்களை தள்ளுகிறது.

அந்த வகையில்., பெரிய அளவில் விபச்சாரம் நடக்கும் பகுதியான ‘ரெட் லைட் ஏரியா’ என்றழைக்கப்படும் காமாத்திபுரா என்கின்ற பகுதியை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க..

1795 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டுமான பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து அழைத்து வரப்பட்ட கூலித்தொழிலாளிகள் வாழ்ந்த பகுதி காமாத்திபுரா.

இந்தியில் `காம்வாலி’ என்றால் வேலைக்காரி என்று அர்த்தம். அந்த அடிப்படையிலும் அந்த பகுதிக்கு காமாத்திபுரா என்ற பெயர் புழக்கத்திற்கு வந்திருக்கலாம் என்கிறார்கள்.

அதன் பிறகு., 1880 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சியில் அந்த பகுதி ராணுவ பாதுகாப்பு வளையமாக்கப்பட்டிருந்தது.

ராணுவ வீரர்களின் செக்ஸ் வெறியை தீர்த்துக்கொள்ள அங்கிருந்த பெண்கள் செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர்.

ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்து அவர்கள் நாட்டை விட்டு சென்ற பிறகு அவர்களின் இடத்தை இந்திய பணக்காரர்கள் பிடித்துக்கொண்டதால் வேறு வழியின்றி அந்த பெண்கள் அதே தொழிலை தொடர்ந்தார்கள்.

காமாத்திபுராவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பெரும்பாலானோர் பெங்காலி, நேபாள், உத்திரபிரதேசம், பிஹார், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

பெரும்பாலும் பாலியல் தொழிலுக்கு கடத்தி வரப்படும் பெண்கள் இந்த விடுதிகளில் தான் விற்கப்படுகிறார்கள்.

மனதளவில் இந்த தொழிலை சகித்து கொண்டு ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே வெளியில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்கின்றனர்.

ஆனால்., சில பெண்கள் தங்களது வடிக்கையாளர்களுக்காக அறையில் காத்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது.

இந்த பகுதியில் குறைந்த அளவு பணத்திற்கு பெண்கள் கிடைப்பதால், மும்பையில் கட்டிட வேலை செய்யும் பிகார்., உத்திரபிரதேசம், ஆந்திராவை சேர்ந்த வட மாநில இளைஞர்கள் அதிக அளவில் குவிகின்றனர்.

ஒரு தெருவில் பாதிவரை விபச்சார விடுதிகளும், மீதி குடும்பங்கள் வாழும் குடியிருப்புகளும் என விநோதமாக இருக்கிறது காமாத்திபுரா.


இந்தபகுதியில் அதிகமாக குஜராத்தி மற்றும் மார்வாடிகள் இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் அந்த விபசார விடுதிகளின் வழியாகவே பள்ளிக்கு செல்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

ஆனால் மும்பையின் வாழ்விட நெருக்கடி எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வைக்கிறது.

மும்பை பெண்களை காமுகர்களிடமிருந்து காப்பாற்றும் `எல்லை தெய்வங்களாக’ காமாத்திபுரா பெண்கள் நிற்கிறார்கள்.

அவர்கள் இல்லையென்றால்.., பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்காகி விடும் என்று பலரும் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

சில என்.ஜி.ஓ.க்களின் தீவிரமான எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ’காண்டம்’ போட்டால் மட்டும் தான் செக்ஸ் என்பதில் அந்த பெண்கள் உறுதியாக இருந்தாலும்., சிலர் எய்ட்ஸில் சிக்கி இறந்து போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related posts:

மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சிகளை ஒரே நாளில் அழிக்க வேண்டுமா..?
பண்டைய எகிப்தினுடைய 5 வினோத பழக்கங்கள் - அதிர்ச்சி வீடியோ
எந்தெந்த விரல்களால் விபூதியை கண்டிப்பாக தொடக்கூடாது?
மரணம் நிகழ போகிறது என கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள்!
உறங்கும் முன் நாக்குக்கு கீழ், சர்க்கரை, உப்பு கலவை வைத்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்!
மருந்துகள் போன்று வேலை செய்யும் 10 சமையலறை பொருட்கள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...