பெண்களை இதயநோயில் இருந்து காக்கும் மீன்!

முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் ஆகியவற்றால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.மீன்களில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது.

இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Grilled Fish Entree in Barcelonaவறுத்த மீனை சாப்பிடுவதை விட, இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது. குறைவாக முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்திருக்கிறது.

இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்களை நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது.

fish grviy

பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனை தரும். மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போகும்.

வறுத்த மீனை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதலாகிறது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகையால் மீனை இதர முறையில் சமைத்து சாப்பிடுவது நல்லது.

Related posts:

விரைவில் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் கணவருடன் சேர வேண்டிய நாட்கள்
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை
பல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக மிக எளிமையான கை மருந்து!
வியர்க்குரு யாருக்கெல்லாம் வரும் - அதனை விரட்டும் இயற்கை வழிகள்
பெண்கள் எப்படி விரல் நகங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் தெரியுமா..?
மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க கிடைக்கும் நன்மைகள் இதோ !
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...