கழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை

காது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் விரைவில் போக்க சில எளிய வழிகள் உண்டு. அவை என்னவென்று பார்க்கலாம்.

கழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை
முகத்தைப் பராமரித்து அழகாக வைத்துக் கொள்ளும் நாம் கழுத்துப் பகுதியை, குறிப்பாக கழுத்தின் பின்பகுதியைப் பற்றி அக்கறை கொள்வதே கிடையாது. குளிக்கும்போதும் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதியென்றால் காதும் பின்பக்க கழுத்தும் தான். காது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க சில எளிய வழிகள் உண்டு. அவை என்னென்ன?

எலுமிச்சைச் சாறு ஏராளமான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகிறது. அதிலும் குறிப்பாக, சருமப்பராமரிப்பில் எலுமிச்சையின் பயன்பாடு மிக அதிகம். கழுத்தின் கருமையைப் போக்குவதிலும் எலுமிச்சைச்சாறு அதிவேகமாகச் செயல்படுகிறது.

எலுமிச்சை சாறுடன் சமஅளவு ரோஸ்வாட்டரை எடுத்துக் கொண்டு கலந்து, இந்த கலவையைக் பின்பக்க கழுத்தில் அப்ளை செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, இந்த சீரமை அப்ளை செய்துவிட்டுப் படுத்து, அடுத்த நாள் காலையில் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரையிலும் இதைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தக்காளி ஜூஸைக் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு, கழுத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரையிலும் காய விடவேண்டும். அதன்பின், நன்கு தேய்த்துக் கழுவவும். இது சருமத்துக்கு நல்ல மாய்ச்சரைஸராகப் பயன்படும். சருமத்திலுள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கும். கழுத்திலுள்ள கருமை மாயமாய் மறைந்து போகும்.

Related posts:

குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் கொடுக்கக்கூடாது எப்போ தெரியுமா.?
தினமும் அதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்புகள் என்ன தெரியுமா?
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? இத செய்த ஈஸியா தடுக்கலாம்!
பல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான எளிய வழிகள்!
கால் எலும்புகளை வலிமையாக்க வேண்டுமா? இதோ ஓர் அற்புத வழி!
பல் வலியால் அவதிப்படுபவரா? 10 நிமிடத்தில் மறைந்து போக இயற்கையான கை மருந்து !
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...